12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (01.11.2019 )..!

2019-11-01 09:43:06

01.11.2019 ஸ்ரீவி­காரி வருடம் ஐப்­பசி மாதம் 15 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச பஞ்­சமி திதி பின்­னி­ரவு 05.03 வரை. அதன்மேல் சஷ்டி திதி. மூலம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 02.28 வரை. பின்னர் பூராடம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை பஞ்­சமி அமிர்­த­சித்­த­யோகம். சுப­நே­ரங்கள் காலை 09.10 10.10 மாலை 04.45–05.45 ராகு­காலம் 10.30–12.00 எம­கண்டம் 03.00–04.30 குளி­கை­காலம் 07.30–09.00 வார­சூலம் மேற்கு (பரி­காரம் வெல்லம்) ஐய­டிகள் காடவர் கோன்­கு­ரு­பூஜை. கந்­த­சஷ்டி விரதம் 05ஆம் நாள் கீழ்­நோக்­குநாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் ரோகிணி. 

மேடம் :உயர்வு, மேன்மை 

இடபம் :சினம், பகை

மிதுனம் :அன்பு, பாசம்

கடகம் :போட்டி, ஜெயம்

சிம்மம் :பணம், பரிசு

கன்னி :நன்மை, அதிஷ்டம்

துலாம் :நலம், ஆரோக்­கியம்

விருச்­சிகம் :இன்பம், மகிழ்ச்சி

தனுசு                 :நம்­பிக்கை, காரி­ய­சித்தி

மகரம் :புகழ், செல்­வாக்கு

கும்பம் :லாபம், லக்ஷ்­மி­கரம்

மீனம் :விவேகம், வெற்றி

இன்று ஐப்­பசி மூலம் மண­வாள மாமுனிகள் திரு­நட்­சத்­திரம். வைஷ்­ண­வர்­களில் தென்­க­லை­யினர் இரா­னு­ஜ­ருக்கு அடுத்த நிலையில் இவ­ருக்கே ஏற்­ற­ம­ளிப்பர். நம்­மாழ்வார், இரா­னுஜர், மண­வாள மா முனிகள் மூவரும் (பிர­ண­வத்­திற்கு) ஓம் என்ற சொல்­லுக்கு ஒப்­பா­ன­வர்கள் ஸ்ரீ வைஸ்­ண­வத்தை வளர்த்த குரவர் பிள்ளை லோகாச்­சா­ரியன், திருவாய் மொழிப்­பிள்­ளையன் ஆகி­யோரின் மாணாக்கர். இவரை "ஜீயர்" என்ற சொல் குறிக்கும். இவர் நூல்­களில் "ஆசார்­ய­ஹி­ரு­தலம்" சிறப்­பா­னது. பல­நூற்­க­ளுக்கு உரை எழு­திய இவர் இறு­தியில் ஸ்ரீவை­குண்­டத்தில் ஆசை பிறந்து "ஆர்த்தி பிர­பந்தம்" செய்து ஸ்ரீவை­குண்டம் அடைந்தார். 

(பழி வாங்­கு­வது இனி­மை­யா­னது என்று முட்­டாள்கள் நினைக்­கின்­றனர். ஜீவனர்)

சூரியன் சுக்­கிரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று. 

அதிஷ்ட எண்கள் – 1, 5

பொருந்தா எண்கள் – 3, 8

அதிஷ்ட வர்­ணங்கள் – பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி 
(தெஹிவளை ஸ்ரீவெங்கடேஸ்வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்தானம்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right