12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (26.10.2019 )..!

2019-10-26 10:35:53

26.10.2019 ஸ்ரீவி­காரி வருடம் ஐப்­பசி மாதம் 9 ஆம் நாள் சனிக்­கி­ழமை. 

கிருஷ்ணபட்ச திர­யோ­தசி திதி பகல் 2.25 வரை. அதன்மேல் சதுர்த்­தசி திதி. உத்­தரம் நட்­சத்­திரம் காலை 7.28 வரை. அதன் மேல் அஸ்தம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 5.55 வரை. பின்னர் சித்­திரை நட் ­சத்­திரம். சிரா­ரத்த திதி தேய்­பிறை திர­யோ­தசி சதுர்த்­தசி. திதித்­வயம். நட்­சத்­திர அவ­மாகம். சம­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் பூரட்­டாதி. சுப­நே­ரங்கள் பகல் 10.45–11.45 மாலை 5.15–6.00. ராகு காலம் 9.00–10.30 எம­கண்டம் 1.30–3.00 குளிகை காலம் 6.00–7.30 வார­சூ­லம்–­கி­ழக்கு (பரி­கா­ரம்–­தயிர்) சதுர்த்­தசி ஸ்நானம். நரக சதுர்த்­தசி. இரவு முன் னோர் பித்­ருக்­க­ளுக்கு படையல் தூபம் போடுதல். 

மேடம் : வெற்றி, அதிர்ஷ்டம்

இடபம் : நன்மை, அதிர்ஷ்டம்

மிதுனம் : இலாபம், லக் ஷ்மிகரம்

கடகம் : செலவு, விரயம்

சிம்மம் : இலாபம்,லக் ஷ்மிகரம்

கன்னி : யோகம், அதிர்ஷ்டம்

துலாம் : திறமை, முன்­னேற்றம்

விருச்­சிகம் : பரிவு, பாசம்

தனுசு : முன்­னேற்றம், திறமை

மகரம் : தெளிவு, அமைதி

கும்பம் : பணம் பரிசு

மீனம் : காரி­ய­சித்தி, அனு­கூலம்

குரு­பெ­யர்ச்சி 26.10.2019 மீன ராசி. (பூரட்­டாதி 4, உத்­தி­ரட்­டாதி ரேவதி) வெளிப்­ப­டை­யாக பேசி பழகும், மீன­ராசி நேயர்­களே! சம­யத்­திற்கு ஏற்­ற­வாறு அடிக்­கடி முகத்தை மாற்றிக் கொள்ளும் நீங்கள் கோபத்தை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்­டீர்கள் என்றால் உங்கள் மண­வாழ்க்கை சிறப்­புறும்.

எரி­மலை போல் வெடித்­தாலும் ஆழ்­கடல் போல் அமை­தி­யா­கி­விடும் குணமும் உங்­க­ளிடம் உண்டு. கடந்த ஒரு­வ­ருட காலமும் 9 ஆம் இடம் இருந்த குரு பகவான் 10 ஆம் இடம் வரு­வது 5 ஆம் பார்­வையால் 2 ஆம் இடம் பார்வை செய்­வது 7 ஆம் பார்­வையால் நான்­கா­மிடம் பார்ப்­பது தனம், பொரு­ளா­தாரம், கல்வி, குடும்பம் போன்­றவை சிறப்­ப­டையும். தொழில் விருத்தி பதவி உயர்வு சிறப்­பாக அமையும். உங்கள் ராசி நாதன் குரு பக­வானை வியாழன் தோறும் வணங்­கு­வீர்­க­ளாக. 70% நன்­மை­யான பலன்கள் உண்­டாகும். சுமா­ரான கால­மிது (முற்றும்)

சனி, குரு கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட நாள் இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 1–5–6

பொருந்தா எண்கள்: 8–4

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள்–நீலம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right