12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (23.10.2019)..!

2019-10-23 10:17:26

23.10.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஐப்­பசி மாதம் 06 ஆம் நாள் புதன்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச தசமி திதி முன்­னி­ரவு 9.25 வரை. அதன் மேல் ஏகா­தசி திதி. ஆயில்யம் நட்­சத்­திரம் பகல் 12.18 வரை. பின்னர் மகம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை தசமி. சித்­த­யோகம். கரிநாள். சுபம் விலக்­குக. கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: திரு­வோணம், அவிட்டம். சுப­நே­ரங்கள்: பகல் 10.45 – 11.45 மாலை 4.45 – 5.45 ராகு­காலம் 12.00 – 1.30 எம­கண்டம் 7.30 – 9.00 குளி­கை­காலம் 10.30 – 12.00 வார­சூலம் – வடக்கு (பரி­காரம் – பால்)  

மேடம் :பிர­யாணம், அலைச்சல்

இடபம் : அசதி, வருத்தம்

மிதுனம் : திறமை, முன்­னேற்றம்

கடகம் : கோபம், சினம்

சிம்மம் : பரிவு, பாசம்

கன்னி : பக்தி, ஆசி

துலாம் : அதிர்ஷ்டம், நன்மை

விருச்­சிகம் : வெற்றி, யோகம்

தனுசு : விரயம், செலவு

மகரம் : பகை, விரோதம்

கும்பம் : பணம், பரிசு

மீனம் : மகிழ்ச்சி, சந்­தோஷம்

குருப் பெயர்ச்சி (28.10.2019 பின்­னி­ரவு) தனுசு ராசி (மூலம், பூராடம், உத்­தி­ராடம் 1 ஆம் பாதம்) பலன்கள்: வைராக்­கியம், திட­சிந்­தனை, நேர்மை, நீதி, தியாகம், தர்­ம­குணம், மற்­ற­வர்­களின் குற்றம் குறை­களை துருவி ஆராயும், பொன்­மனச் செம்­மல்­களே! குரு­ப­கவான் உங்கள் ராசி­நாதன் ராசிக்கு வரு­கின்றார். ஆட்­சி­யுடன் இருப்­பதால் இது­வரை காலமும் சனி, கேது­வினால் பாதிப்­ப­டைந்த உடல்­நிலை சீராகும். குடும்­பத்தில் மகிழ்ச்சி, புத்­திர வகையில் மகிழ்ச்சி, மனை­வியின் உடல் நலம் குண­ம­டைதல், தொழி­லா­ளர்­க­ளுக்கு செய்­தொழில் விருத்தி, 9 ஆவது பார்வை பிதுர் பாக்­கிய தர்­மஸ்­தா­னத்தை பார்ப்­பதால் வெளி­நாட்டு பிர­யாணம், சுபச் செல­வுகள் ஏற்­பட பலன் உண்டு. குரு­ப­க­வானின் உதயம், சஞ்­சாரம், வக்­ர­கதி, அதி­சாரம் அஸ்­மனம், தசா­புத்தி பலன் சிறிய மாற்­றங்­களை உண்டு பண்­ணி­னாலும் பாத­க­மான பலன்கள் ஏது­மில்லை. சனி­ப­க­வானை வழி­பட சக­லதும் நன்­மையே. 85 வீதம் நற்­ப­லன்கள் உண்டு. 

புதன், செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5 – 9

பொருந்தா எண்கள்: 2 – 8 – 1

அதிர்ஷ்ட வர்ணங்கள்: சிவப்பு, நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right