20.04.2016 துர்முகி வருடம் சித்திரை மாதம் 07ம் நாள் புதன் கிழமை

2016-04-20 07:38:00

சுக்கிலபட்ச திரயோதசி திதி காலை 7.13வரை. அதன்மேல் சதுர்த்தசி திதி அஸ்தம் நட்சத்திரம் பின்னிரவு 4.57 வரை. பின்னர் சித்திரை நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை சதுர்த்தசி. மரண யோகம். கீழ் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் பூரட்டாதி. சுபநேரங்கள் காலை 9.30 – 10.30. மாலை 4.30 –5.30 ராகுகாலம் 12.00 – 1.30. எமகண்டம் 7.30 – 9.00 குளிகைகாலம் 10.30 – 12.00 வாரசூலம் வடக்கு (பரிகாரம் – பால்) உமாபதி சிவாச்சாரியார் குருபூஜை தினம். மறை ஞானசம்பந்தர் சீடர் பிறந்தது. கொற்றவன்குடி சைவ சிந்தாந்த அட்ட கங்கள் எட்டு நூல்களை அருளியவர். பெற்றவர் சாம்பானுக்கும் முள்ளிச்செடிக்கும் முக்தி அருளியவர். சிதம்பரத்தில் கொடிக்கவி பாடி ஏறாது நின்ற கொடியை ஏற்றியவர். 

மேடம் :  களிப்பு, மகிழ்ச்சி

இடபம் :  வரவு, லாபம்

மிதுனம் :  ஆர்வம், திறமை

கடகம் :  அமைதி, சாந்தம்

சிம்மம் :  செலவு, விரயம்

கன்னி : அன்பு, பாசம்

துலாம் : உறுதி, திடம்

விருச்சிகம் : உதவி, நட்பு

தனுசு : புகழ், கீர்த்தி

மகரம் : சலனம், சஞ்சலம்

கும்பம் : லாபம், லஷ்மீகரம்

மீனம் : கவனம், எச்சரிக்கை

குலசேகர ஆழ்வார் அருளிய பெருமாள் திருவாய் மொழி ஸ்ரீ இராமர் தாலாட்டு பாசுரம் “புண்டரிக மலரதன் மேல் புவனியெல்லாம் படைத்தவனே! திண் டிறலான் தாடகை தன் உரமுருவச்சிலை வளர்த்தாய் கண்டவர்தம் மனம் வழங்கும் கணபுரத்தென் கருமணியே! எண்டிசையும் ஆளுடையாய்! ராகவனே! தாலேலோ, பொருளுரை –தாமரை மலரின் மேல் பிரம்மாவை தோற்றுவித்து அவர் மூலமாய் உலகங்களைப் படைத்தவனே. வலிமையுடைய தாடகையின் உயிரை மாய்த்தவனே பார்த்வர்கள் மனதை பறிகொடுக்கும் படியாக திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளிய என் கண்ணின் கருமணி போன்ற ராகவனே! எட்டு திசைகளையும் ஆள்பவனே. உன்னைத் தாலாட்டுகின்றேன். “குலசேகர ஆழ்வார் திருவடிகளே சரணம்.”

“ஒருவன் வாழ்க்கையில் செல்வத்தைவிட செல்வாக்கு உயர்வானது மேலானது”

சந்திரன், சுக்கிரன் ஆதிக்கம் கொண்ட இன்று,

அதிர்ஷ்ட எண்கள்:  7, 6

பொருந்தா எண்கள்: 8, 9, 3

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right