12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (02.10.2019)..!

2019-10-02 09:57:29

02.10.2019 ஸ்ரீவி­காரி வருடம் புரட்­டாதி மாதம் 15 ஆம் நாள் புதன்­கி­ழமை

சுக்­கில பட்ச சதுர்த்தி திதி மாலை 5.07 வரை. அதன் மேல் பஞ்­சமி திதி. விசாகம் நட்­சத்­திரம் மாலை 6.42 வரை. பின்னர் அனுஷம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை சதுர்த்தி. சித்­த­யோகம். கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அஸ்­வினி, பரணி. சுப­நே­ரங்கள்; பகல் 10.45–11.45 மாலை 4.45–5.45. ராகு­காலம் 12.00 –1.30, எம­கண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30–12.00, வார­சூலம்– வடக்கு (பரி­காரம் –பால்) சதுர்த்தி விரதம், நவ­ராத்­திரி விரதம், மகா­லக் ஷ்மி பூஜை. தெஹி­வளை விஷ்ணு ஆல­யத்தில் விஷ்வக் சேன கண­பதி ஷோகம். பிரம்­மோற்­சவ உற்­சவ ஆரம்பம்.

மேடம் : பக்தி, ஆசி

இடபம் : அமைதி, சாந்தம்

மிதுனம் : சிரமம், தடை

கடகம் : யோகம், அதிர்ஷ்டம்

சிம்மம் : களிப்பு, மகிழ்ச்சி

கன்னி : நஷ்டம், விரயம்

துலாம் : தனம், சம்­பத்து

விருச்­சிகம் : பிர­யாணம், அலைச்சல்

தனுசு : ஊக்கம், உயர்வு 

மகரம் : புகழ், செல்­வாக்கு

கும்பம் : கோபம், சினம்

மீனம் : புகழ், செல்­வாக்கு

புரட்­டாதி மாதம் திரு­மலை திருப்­பதி பிரம்­மோற்­சவம். திரேதா யுகத்தில் திரு­மலை பெற்ற நாமம் அஞ்­ச­னாத்ரி. சிறிய திரு­வடி என்று போற்­றப்­படும் ஆஞ்­ச­நே­யனை அவன் தாயார் அஞ்­சனா தேவி தவ­மி­ருந்து பெற்­றது திரு­ம­லையில். ஆதலால் அஞ்­ச­னாத்ரி என்று இம்­மலை உண்­டா­னது. மூன்­றா­வது யுக­மான துவா­பர யுகத்தில் இம்­மலை சேஷாத்­திரி சேஷா­சலம் என்று பெயர் உண்­டா­னது. மகா­விஷ்­ணுவை தரி­சனம் செய்ய வாயு­ப­கவான் சென்­ற­வேளை, ஆதி­சேடன் பிறகு வரும்­ப­டி­ கூற இரு­வ­ருக்குள்  யார் பெரி­யவர் என்று தர்க்கம் ஏற்­பட உண்­டான வர­லாறு நாளை தொடரும்.

சந்­திரன், சுக்­கிரன் ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 7, 6

பொருந்தா எண்கள்: 9, 8, 3

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை கலந்த நிறங்கள்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right