12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (18.09.2019)..!

2019-09-18 10:05:16

18.09.2019 ஸ்ரீவிகாரி வருடம் தட்சிணா யனம் வர்ஷருது புரட்டாதி (கன்னி) மாதம் 01 ஆம் நாள் புதன்கிழமை 

கிருஷ்ணபட்ச சதுர்த்தி திதி மாலை 04.24 வரை. அதன்மேல் பஞ்சமி திதி. அஸ்வினி நட்சத்திரம் புதன்கிழமை. காலை 06.13 வரை பின்னர் பரணி நட்சத்திரம். சிரார்த்த திதி சூன்யம். மரணயோகம் காலை 06.13 வரை பின்னர் சித்தயோகம் சமநோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரம்  சுவாதி. சுபநேரங்கள் பகல் 10.45–11.45 மாலை 03.00–04.00 ராகுகாலம் 12.00–01.30 எமகண்டம் 07.30–09.00 குளிகைகாலம் 10.30–12.00 வாரசூலம் வடக்கு (பரிகாரம் பால்) இன்று பிதுர்கடன் இயற்றுதல் நன்று. மகாபரணி சதுர்த்தி  விரதம். 

மேடம் :லாபம், லக்ஷமீகரம் 

இடபம் :நலம், ஆரோக்கியம் 

மிதுனம் :சுகம், இன்பம்

கடகம் :நட்பு, உதவி 

சிம்மம் :விவேகம், வெற்றி

கன்னி :போட்டி, ஜெயம்

துலாம் :அசதி, வருத்தம் 

விருச்சிகம் :புகழ், பாராட்டு

தனுசு :அமைதி, பொறுமை

மகரம் :அமைதி, நிம்மதி 

கும்பம் :தனம், சம்பத்து

மீனம் :அமைதி, நிம்மதி 

புரட்டாதி சனி வாரம். "இலங்கை இராவ ணனுக்கு கெட்டிலே சனி இராமனாலுயிர் மாண்டான் நானிலந்தனில் சுக்கிரன் குருடானது சனி இரண்டிலே. பாவி சூர்ப்பனகை மூக்கறுந்ததும் பகருஞ்சனி ஜென்மமாகும்." அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி. தப்பி ஓடிப்போன வனுக்கு ஒன்பதில் குரு என்ற வாக்கின் படி இராவணன் போர்க்களத்தில் ஒழியும் நிலை ஏற்பட்டது.  அஷ்டம சனியின் காலத்தில் என்பதை அறிக. சனி பகவான் வான மண்டலத்தில் கிரகங் களுக்கெல்லாம் மேலே உள்ளார். ஓர் இராசியில் இரண்டரை வருடம் வீதம் பன்னிரண்டு இராசியைக் கடக்க முப்பது வருடங்கள் செல்லும். இதனாலேயே "முப்பது வருடங்கள் வாழ்ந்தவனுமில்லை  முப்பது வருடம் கெட்டவனும் இல்லை" என்னும் பழமொழி உண்டானது. (நாளை தொடரும்) (" பரிசுத்தமான மனம் உடையவர் களுக்கு எல்லாம் பரிசுத்தமாகவே காணப்படும். "ஸ்ரீசாரதா தேவியார்) செவ்வாய் குரு கிரகங்களின் ஆதிக்க நாளின்று. 

அதிஷ்ட எண்கள்   5 3 9

பொருந்தா எண்கள்   2 6 8

அதிஷ்ட வர்ணங்கள் மஞ்சள், நீலம் இராமரத்தினம் ஜோதி 

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right