18.04.2016 துர்முகி வருடம் சித்திரை மாதம் 05 ஆம் நாள் திங்கட்கிழமை

2016-04-18 07:28:30

சுக்கில பட்ச துவாதசி திதி பின்னிரவு 5.32வரை. அதன் மேல் திரயோதசி திதி. பூரம் நட்சத்திரம் பின்னிரவு 12.21 வரை. பின்னர் உத்தரம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை துவாதசி. சித்தயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் திருவோணம் அவிட்டம் சுப நேரங்கள் காலை 9.30– 10.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 7.30– 9.00. எமகண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00. வார சூலம் கிழக்கு (பரிகாரம் – தயிர்)

மேடம்: ஜெயம், புகழ்

இடபம்: புகழ், பாராட்டு

மிதுனம்: கவனம், எச்சரிக்கை

கடகம்: அமைதி, நிம்மதி

சிம்மம்: அன்பு, இரக்கம்

கன்னி: தடை, இடையூறு

துலாம்; ஆதாயம், இலாபம்

விருச்சிகம்: அமைதி, தெளிவு

தனுசு: செலவு, விரயம்

மகரம்: புகழ், பெருமை

கும்பம்: அன்பு, பாசம்

மீனம்: பிரிவு, கஷ்டம்

பெரியாழ்வார் அருளிய முதல் பத்து நான்காம் திருவாய்மொழி "கண்ணன் தாலாட்டு" பாசுரம் "வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலையுண்ட அஞ்சன வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய செஞ்சொல் மறையவர் சேர் புதுவை பட்டன் சொல் எஞ்சானம் வல்லவருக்கு இல்லை இடர்தானே." பொருளுரை : குழந்தை கண்ணனை கொல்ல சதி திட்டத்தோடு வந்த பூதகி வஞ்சகமாக பாலூட்ட பாலோடு அவள் உயிரையும் குடித்த கரு நிற கண்ணனை ஆயர் குலத்தவனை யாசோதை தாலாட்டியதை வேத விற்பன்னர்கள் மிகுந்த ஸ்ரீ வில்லி புத்தூரில் வாழ்ந்த பெரியாழ்வாரான பட்டர் பிரான் பாடியுள்ள இந்த பத்து பாசுரங்களையும் பக்தியோடு பாடுபவர்களுக்கு எக்காலத்திலும் துன்பங்கள் தொடராது. ஆழ்வார் திருவடிகளே சரணம். நாளை முதல் குலசேகர ஆழ்வார் அருளிய எட்டாம் திருவாய் மொழி இராமர் தாலாட்டு. திருக்கண்ணப்புரத்து பெருகை. ("எந்தத் தடையும் உங்கள் கடமையிலிருந்து விலகும் படி செய்யாதவாறு வாழுங்கள்")

செவ்வாய், ராகு கிரகங்களின்  ஆதிக்க நாள் இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

பொருந்தா எண்கள்: 2, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  நீலம், மஞ்சள், சிவப்பு

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right