12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (12.09.2019)..!

2019-09-12 10:35:16

12.09.2019 ஸ்ரீவி­காரி வருடம்  ஆவணி மாதம் 26 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச திர­யோ­தசி திதி காலை 06.23 வரை. அதன்மேல் சதுர்த்­தசி திதி. அவிட்டம் நட்­சத்­திரம். மாலை 06.46 வரை பின்னர் சதயம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை சதுர்த்­தசி. சித்­த­யோகம் மாலை 06.46 வரை. பின்னர் மர­ண­யோகம் மேல்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் பூசம், ஆயில்யம். சுப­நே­ரங்கள் பகல் 10.45–11.45 மாலை 04.45 –05.45 ராகு­காலம் 01.30 03.00 எம­கண்டம் 06.00–07.30 குளி­கை­காலம் 09.00–10.30 சுப­மு­கூர்த்த நாள். நட­ராஜர் அபி­ஷேகம். அனந்த விரதம். கதளி கௌரி விரதம். 

மேடம் லாபம், ஆதாயம் 

இடபம் நிறைவு, பூர்த்தி

மிதுனம் அமைதி, தெளிவு

கடகம் போட்டி, ஜெயம் 

சிம்மம் நன்மை, அதிஷ்டம் 

கன்னி வெற்றி, யோகம்

துலாம் புகழ், பெருமை

விருச்­சிகம் சினம், பகை

தனுசு தொல்லை, சங்­கடம்

மகரம் உயர்வு, ஊக்கம் 

கும்பம் மேன்மை, செல்­வாக்கு

மீனம் நன்மை, யோகம்

இன்று ஆஞ்­ச­நே­யரை வழி­படல் நன்று. 

"அஞ்­சிலே ஒன்று பெற்றான், அஞ்­சியே  ஒன்­றைத்­தாவி அஞ்­சிலே ஒன்று ஆறாக, ஆரு­யி­ருக்­காக ஏகி அஞ்­சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில் அஞ்­சிலே ஒன்று வைத்தான். அவன் நம்மை அளித்­துக்­காப்பான்." ஆஞ்­ச­நே­யனை பஞ்ச பூதங்­க­ளுடன் தொடர்­பு­றுத்தும் பாடல் பஞ்ச பூதங்­களில் ஒன்­றான வாயுவின் புத்­திரன். பிறி­தொன்­றான நீரை (கடலைக்) கடந்­தவன். "நிலம்" என்ற பூமா­தே­வியின் அம்­ச­மான சீதைப் பிராட்­டியை தேடிச் சென்­றது. ("நல்ல நண்­பர்­களைப் பெற்­ற­வ­னுக்கு நிலைக்­கண்­ணாடி தேவை­யில்லை")   

 குரு சுக்­கிரன் கிர­கங்­களின் ஆதிக்கம் கொண்ட இன்று. 

அதிஷ்ட எண் 9

பொருந்தா எண்கள்  3 6 8

அதிஷ்ட வர்ணங்கள்  பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி 

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right