12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (10.09.2019)..!

2019-09-10 10:28:28

10.09.2019 ஸ்ரீ வி­காரி வருடம் ஆவணி மாதம் 24 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை 

சுக்­கி­ல­பட்ச துவா­தசி திதி பின்­னி­ரவு 04.45 வரை. அதன்மேல் திர­யோ­தசி திதி உத்­தி­ராடம் நட்­சத்­திரம் பகல் 02.22 வரை  பின்னர் திரு­வோணம் நட்­சத்­திரம். சிரார்த்தத் திதி வளர்­பிறை துவா­தசி சித்­த­யோகம் மேல்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் திரு­வா­திரை, புனர்­பூசம் சுப­நே­ரங்கள் பகல் 10.45 –11.45 மாலை 04.45 – 05.45 ராகு­காலம்  03.00–04.30 எம­கண்டம் 09.00 –10.30 குளி­கை­காலம் 12.00–01.30 வார­சூலம் வடக்கு (பரி­காரம் பால்) இன்று குரு­ஜெ­யந்தி குரு­ப­க­வானை வழி­ப­டவும். 

மேடம்     புகழ், பெருமை

இடபம் போட்டி, ஜெயம் 

மிதுனம் உழைப்பு, உயர்வு 

கடகம் முயற்சி, முன்­னேற்றம் 

சிம்மம் லாபம், ல­க்ஷமீ­கரம்

கன்னி நிறைவு, பூர்த்தி 

துலாம் புகழ், பாராட்டு

விருச்­சிகம் நஷ்டம், கவலை 

தனுசு அன்பு, ஆத­ரவு 

மகரம் விவேகம், வெற்றி 

கும்பம்           புகழ், செல்­வாக்கு

மீனம் வெற்றி, விவேகம் 

இன்று மகா­விஷ்­ணுவின் ஐந்­தா­வது அவ­தா­ர­மான வாமன ஜெயந்தி. "ஓதப்­புனல் பொன்னி நன்னீர் அரங்கர் உலகு அளந்த பாதத்து நீர் விண்­படி பிலம்  மூன்­றிலும் பால்­புரை வெண்­சீ­தத்­த­ரங்கம் மந்­தா­கி­னி­யாகிச் செழும் கங்­கையாய் மேதக்க போக வதி­யாகி நாளும் விழு­கின்­றதே" அழ­கிய மண­வாள தாசர் என்னும் பிள்­ளைப்­பெ­ருமாள் ஐயங்கார் எழு­திய அஷ்­ட­பி­ர­பந்தம்.  பொருள்- குளிர்ச்சி அலைப்­பெ­ருக் 

கம் கொண்ட நீரை பூமி, ஆகாயம், பாதா ளம் ஆகி­ய­வற்றில் பர­வ­வேண்டி பெருமான் வாமன அவ­தா­ர­மெ­டுத்து  மண்­ண­ளந்து, 

விண் அளந்து மகா­ப­லியின்  சிரம் அளந் தான். ஆகா­யத்தில் பகவான் திரு­வ­டியை பிரம்மன் கழு­வும்­போது ஸ்ரீபாத தீர்த்தம் சொர்க்­க­லோ­கத்தில் மந்­தா­கினி என்னும், பூலோ­கத்தின் கங்கை என்றும் பாதாள லோகத்தில் போகஷி என்றும் பாய்ந்தாம். 

சூரியன், ராகு கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட இன்று. 

அதிஷ்ட எண்கள்      – 1,5

பொருந்தா எண்       – 5

அதிஷ்ட வர்ணங்கள் – மஞ்சள், வெளிர் நீலம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right