16.04.2016 துர்முகி வருடம் சித்திரை மாதம் 3 ஆம் நாள் சனிக்கிழமை

2016-04-17 13:35:39

சுக்கில பட்ச தசமி திதி பின்னிரவு 3.23 வரை. அதன் மேல் ஏகாதசி திதி. ஆயிலியம் நட்சத்திரம் முன்னிரவு 9.13 வரை. பின்னர் மகம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை தசமி திதி. மரண யோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் பூராடம் உத்திராடம் சுப நேரங்கள் காலை 7.30– 8.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 9.00– 10.30. எமகண்டம் 1.30– 3.00, குளிகை காலம் 6.00– 7.30 .வார சூலம் கிழக்கு (பரிகாரம் தயிர்)

மேடம்: லாபம், லஷ்மீகரம்

இடபம்: அமைதி, நிம்மதி

மிதுனம்: விருத்தி, அதிர்ஷ்டம்

கடகம்: வரவு, லாபம்

சிம்மம்: மறதி, விரயம்

கன்னி: நன்மை, யோகம்

துலாம்; நலம், ஆரோக்கியம்

விருச்சிகம்: அமைதி, தெளிவு

தனுசு: நஷ்டம், கவலை

மகரம்: புகழ், பெருமை

கும்பம்: அன்பு, ஆதரவு

மீனம்: உதவி, நட்பு

பெரியாழ்வார் அருளிய “கண்ணன் தாலாட்டு முதற்பத்து நான்காம் திருவாய் மொழி பாசுரம்” கச்சொடு பொற் சுரிகை காம்பு கனகவளை உச்சி மணிச்சுட்டி ஒண்தான் நிறைப்பொற்பூ அச்சுதனுக்கென்று அவனியாள் போத்தந்தாள் நச்சு முலையுண்டாய் தாலே லோ நாராயணா அழேல் தாலேலோ” பொருளுரை: பூமி தேவி ஆடையின் மேல் கட்ட கச்சையும் பொற்பிடி போட்ட உடைவாளையும் தங்க வளையல் களையும் அனுப்பி இருக்கின்றாள். பூதகியின் நஞ்சு முலைப் பாலையும் குடித்தவனே! நாராயணா! அழாமல் இரு உன்னைத் தாலாட்டுகிறேன் (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

“சோர்வு என்பது மனிதனை கொல்லும் நஞ்சு”

கேது சந்திரன் ஆதிக்கம் கொண்ட நாள் இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 7, 8, 9

அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிர் நீலம், வெளிர் மஞ்சள்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right