13.04.2016 மன்மத வருடம் பங்குனி மாதம் 31 ஆம் நாள் புதன்கிழமை.

2016-04-13 00:01:48

சுபயோகம்

13.04.2016 மன்மத வருடம் பங்குனி மாதம் 31 ஆம் நாள் புதன்கிழமை.

சுக்கில பட்ச ஸப்தமி திதி பின்னிரவு 3.52 வரை. அதன் மேல் அஷ்டமி திதி. திருவாதிரை நட்சத்திரம் முன்னிரவு 8.08 வரை. பின்னர் புனர்பூசம் நட்சத்திரம்.  திதி சூன்யம் மேல் நோக்கு நாள். சந்திராஷ்டமம் அனுஷம், கேட்டை. சுபநேரங்கள் காலை 9.30 – 10.30, மாலை 4.30 – 5.30, ராகு காலம் 12.00 – 1.30, எமகண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30 – 12.00. வார சூலம் வடக்கு (பரிகாரம் – பால்) விஷுபுண்ய காலம் முன்னிரவு 6.36 புத்தாண்டு பிறப்பு.

மேடம்:  நன்மை, அதிர்ஷ்டம்

இடபம்:  உண்மை, உயர்வு

மிதுனம்:  பணிவு, பாசம்

கடகம்:  பிரயாசை, நஷ்டம்

சிம்மம்:  ஊக்கம், உயர்வு

கன்னி:  உற்சாகம், வரவேற்பு

துலாம்:  அமைதி, சாந்தம்

விருச்சிகம்: தடை, இடையூறு

தனுசு: பீரிதி, மகிழ்ச்சி

மகரம்: போட்டி, ஜெயம்

கும்பம்: பொறுமை, அமைதி

மீனம்: சுபம், மங்கலம்

பெரியாழ்வார் அருளிய முதற்பத்து நான்காம் திருமொழி கண்ணனை தாலாட்டுதல். பாசுரம் ஓதக் "கடலின் ஒளி முத்தின் ஆரமும் சாதிப் பவளமும் சந்தச் சரிவலையும் மாதக்க என்று வருணன் விடுதந்தான் சோதிச் சடர் முடியாய். தாலேலோ! சுந்தரத் தோளனே தாலேலோ! " பொருளுரை: மழைக்கு அதிபதியான வருணன் பிரகாசமான கடல் முத்து கனிவான  முத்தாரமும் நல்ல சாதிப்பவளத்திலான முன் கைசரி வளையும் சங்கு வளைகளையும் உனக்கு அழகாயிருக்கு என்று கொண்டு வந்துள்ளான். மிகுந்த ஒளியைத் தரும் முடியை உடையவனே! அழகிய தோள்களைக் கொண்டவனே! உன்னைத் தாலாட்டுகிறேன்! (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

(கீழே விழுந்தவனைக் கண்டு சிரிக்காதே. நீ செல்லும் பாதையிலும் பாசி உண்டு. பள்ளமும் உண்டு) 

ராகு, சனி கிரகங்களின் ஆதிக்க நாளான இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right