12.04.2016 மன்மத வருடம் பங்குனி மாதம் 30 ஆம் நாள் செவ்வாய்கிழமை

Published on 2016-04-12 07:41:34

சுக்கிலபட்ச பஞ்சமி திதி காலை 6.30 வரை அதன் பின்னர் சஷ்டி திதி. பின்னிரவு 4.57 வரை பின்னர் ஸப்தமி திதி.  மிருகசீரிஷம் நட்சத்திரம் முன்னிரவு 8.40 வரை பின்னர் திருவாதிரை நட்சத்திரம். சிரார்த்த திதி சஷ்டி சித்தயோகம் . சஷ்டி விரதம் சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் விசாகம், அனுஷம். திதி ???????.  சுபநேரங்கள் காலை 7.30 – 8.30, பகல்10.30 – 11.30 மாலை 4.30 – 5.30 ராகுகாலம் 3.00 – 4.30. எமகண்டம் 9.00 – 10.30. குளிகை காலம் 12.00 – 1.30 வார சூலம் வடக்கு.  (பரிகாரம் – பால்). நாளை விஷுபுண்யகாலம். மருத்து நீர் தெஹிவளை விஷ்ணு ஆலயத்தில் பெற்றுக் கொள்ளலாம். 

மேடம் : அச்சம், பகை

இடபம் : சுகம், ஆரோக்கியம்

மிதுனம் :நிறைவு, பூர்த்தி

கடகம் : கவனம், எச்சரிக்கை

சிம்மம் : திறமை, முன்னேற்றம்

கன்னி :சிரமம், தடை

துலாம் : ஊக்கம், உயர்வு

விருச்சிகம் : நலம், நன்மை

தனுசு : லாபம், லஷ்மீகரம்

மகரம் : அன்பு, இரக்கம்

கும்பம் : ஜெயம், வெற்றி

மீனம் : புகழ், பெருமை

பெரியாழ்வார் அருளிய முற்பத்து நான்காம் திருமொழி "எழிலார் திருமார்புக்கு ஏற்கும் இவையென்று அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு வழுவில் கொடையாள் வயிச்சி ரவணன் தொழுது உவனாய் நின்றான். தாலேலோ தூமணி வண்ணனே! தாலேலோ! பொருளுரை: குற்றமற்ற கொடையாளியான குபேரன் அழகிய உன் திருமார்புக்கு பொருத்தமான அழகிய சங்கு, சக்கரம் வில் ,வாள் கதை இவற்றின் வடிவில் கண்ணூறு வராதிருக்க ஐம்படைத்தாலியும் ஆரமும் எடுத்துக் கொண்டு வரிசையின் நடுவில் நின்று தொழுத வண்ணமுள்ளான். குற்றமற்ற நீலமணி நிறத்தவனே உன்னைத் தலாட்டுகின்றேன். ஆழ்வார் திருவடிகளே சரணம். 

(ஒருவனிடம் பரிவு, பண்பாடு அவற்றை தோற்றுவிப்பது அவனிடம் குடிகொண்ட ஆன்மீகச் செல்வமாகும்.)

குரு, கேது கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  மஞ்சள், இளஞ் சிவப்பு, ஊதாநிறங்கள். 

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)