பூவோடு இருப்பதால் முள்ளை யாரும் விரும்புவதுமில்லை..முள்ளோடு உள்ளதென்று பூவை யாரும்வெறுப்பதுமில்லை: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ( 22.06.2019 )..!

2019-06-22 09:55:30

22.06.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஆனி மாதம் 07 ஆம் நாள்  சனிக்­கி­ழமை.

கிருஷ்ண பட்ச பஞ்­சமி திதி முன்­னி­ரவு 09.02 வரை. அதன் மேல் சஷ்டி திதி. அவிட்டம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 09.04 வரை. பின்னர் சதயம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை பஞ்­சமி. சித்­தா­மிர்­த­யோகம் மேல் நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் பூசம் ஆயி­லியம். சுப­நே­ரங்கள் பகல் 10.30 – 11.30 மாலை 04.30– 05.30, ராகு காலம் 09.00– 10.30. எம­கண்டம் 01.30 – 03.00 குளிகை காலம் 06.00 – 07.30, வார­சூலம் – கிழக்கு (பரி­காரம் –  தயிர்). 

மேடம்     : பகை, விரோதம் 

இடபம்    :  உதவி, நட்பு

மிதுனம் : தடை, இடை­யூறு

கடகம்    :  களிப்பு, மகிழ்ச்சி

சிம்மம்  :  நோய், வருத்தம்

கன்னி   :  கவலை, கஷ்டம்

துலாம்   :  தடை, தாமதம்

விருச்­சிகம் : பகை, எதிர்ப்பு

தனுசு   :  வரவு, இலாபம்

மகரம்  : நலம், ஆரோக்­கியம்

கும்பம் : புகழ், பெருமை

மீனம்   : நலம், ஆரோக்­கியம் 

“சனி பகவான் சிறப்பு ஆரா­தனை நாள் அவிட்டம் நட்­சத்­திரம் அஷ்ட வசுக்கள் இந்­நட்­சத்­திர தேவ­தை­க­ளாவர். அஷ்ட வசுக்­களாய் போற்றி துதிக்கப் பெறும் அனந்த சயன பத்ம நாப பெரு­மாளை வழி­ப­டுதல் நன்று. 

(“ குழந்­தைகள் மத்­தியில் உட்­கார்ந்து மகிழும் தாயை விட அதிகம் போற்­று­தற்­கு­ரி­யவர் யாரும் கிடையார்” – கதே ஜெர்­மனி)  

ராகுவின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 1 – 5 – 6

பொருந்தா எண் :  8

 இராமரத்தினம் ஜோதி

(தெகிவளை விஷ்ணு கோயில்)

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள் வெளிர் நீலம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right