05.04.2016 மன்மத வருடம் பங்குனி மாதம் 23 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை

2016-04-05 07:02:09

கிருஷ்ண பட்ச திரயோதசி திதி முன்னிரவு 10.02 வரை.  அதன் மேல் சதுர்த்தசி திதி சதயம் நட்சத்திரம் காலை 7.57 வரை. பின்னர் பூரட்டாதி நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை திரயோதசி மரணயோகம் மேல் நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் மகம். சுபநேரங்கள் காலை 7.30 – 8.30,10.30 – 11.30, மாலை 4.30 – 5.30, ராகு காலம் 3.00 – 4.30, எமகண்டம் 9.00 – 10.30, குளிகை காலம் 12.00 – 1.30, வார சூலம் வடக்கு (பரிகாரம்– பால்) பிரதோஷம் மாத சிவராத்ரி சிவனையும் நந்தி தேவரையும் வழிபடல் நன்று

மேடம்: அன்பு, இரக்கம்

இடபம்: உயர்வு, மேன்மை

மிதுனம்: பரிவு, பாசம்

கடகம்: சோர்வு, வருத்தம்

சிம்மம்: அச்சம், பகை

கன்னி: விவேகம், வெற்றி

துலாம்: சினம், பகை, 

விருச்சிகம்: இன்பம், மகிழ்ச்சி

தனுசு: பக்தி, ஆசி

மகரம்: சுபம், மங்களம்

கும்பம்: தனம், சம்பத்து

மீனம்: உண்மை, உறுதி

குலசேகராழ்வார் அருளிய நான்காம் திருமொழி. திருப்பதியில் பிறக்க அவாவுறுதல். பாசுரம் முடிவுற்றது. " உம்பர்  உலகாண்டு ஒரு குடைக்கீழ் ஊர்வசி தன் அம்பொற்கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன். செம்பவள வாயான் திருவேங்கடமென்னும் எம் பெருமான் பொன்மலை மேல் ஏதேனுமாவேனே." பொருளுரை தேவர் உலகங்களை ஒரு கொற்றக் குடை கீழ் ஆளும் யோகமும் ஊர்வசியின் அழகும் அணைப்பும் அழகிய அல்குலும் எனக்கு வேண்டாம் சிவந்த பவளம் போன்ற வாயை உடைய திரு வேங்கடமுனையானின் நாமத்தையுடைய திருமலை மேல் எனக்கு எப்பிறவியும் வேண்டாம். அவன் கொடுக்கும் ஏதாவது பிறவியாக பிறக்க ஆசைப்படுகின்றேன். ஏனென்றால் துவாரகா நிலைய வாசனான அவனே நித்யம். அவனே சத்யம். ஆழ்வார் திருவடிகளே சரணம்.

(“நலமான உடல் ஆன்மாவின் கோயில். நலிவான உடல் ஆன்மாவின் சிறைச்சாலை”)

புதன், செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

பொருந்தா எண்கள்: 2, 8, 1

அதிர்ஷ்ட வர்ணங்கள்: சிகப்பு, நீலம், சாம்பல் நிறம்.

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right