04.04.2016 மன்மத வருடம் பங்குனி மாதம் 22 ஆம் நாள் திங்கட்கிழமை

2016-04-12 07:42:35

கிருஷ்ணபட்ச துவாதசி திதி பின்னிரவு 12.02 வரை. பின்னர் திரயோதசி திதி அவிட்டம் நட்சத்திரம் காலை 9.03 ரை. அதன் மேல் சதயம் நட்சத்திரம் சிரார்த்த திதி தேய்பிறை துவாதசி. சித்தியோகம். மேல் நோக்கு நாள் சந்திராஷ்டம  நட்சத்திரம் ஆயில்யம். சுபநேரங்கள் காலை 9.30– 10.30, பிற்பகல் 1.30– 2.30, ராகு காலம் 7.30– 9.00, எமகண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வார சூலம் கிழக்கு (பரிகாரம்– தயிர்) தண்டியார் நாயனார் குரு பூஜை தினம் சுபமுகூர்த்த நாள்.

மேடம்: பக்தி ஆசி

இடபம்: பணம், பரிசு

மிதுனம்: பகை, பயம்

கடகம் :பகை, விரோதம்

சிம்மம்: பரிவு, பாசம், 

கன்னி: புகழ், பாராட்டு

துலாம்: அன்பு, பாசம்

விருச்சிகம்: ஓய்வு, அசதி

தனுசு: வரவு, லாபம்

மகரம்: சஞ்சலம், கவலை

கும்பம்: புகழ், பெருமை

மீனம்: பிரிவு, பாசம்

குலசேகரஆழ்வார் அருளிச் செய்த பெருமாள் திருமொழி பாசுரம் செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே’ வேங்கடவா! நின் கோயிலின் வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்து உன் பவளவாய்க் காண்பேனே பொருளுரை:  முட்செடி போல் படர்ந்துள்ள கொடிய வினைகளைத் தீர்க்கும் பெருமானே! திரி விக்ரமானாய் உயர்ந்தனே வெங்கடேஸ்வரா! உன் சந்நிதி வாசலில் உன் அடியார்களும் தேவர்களும் உன்னை தரிசிக்க இடை  விடாமல் ஏறி இறங்கும் படியாய் நான்  கிடக்கும் பேறு பெற்றால் எப்போதும் உன் பவளம் போன்ற திருவாயைக் காண்பேனே (இப்போதும் பெருமாள் ஆலயங்களில் கர்பக்கிரகத்துள் செல்லும்படி குலசேகரன் படியென்று அழைக்கப்படுகிறது) திருமலை திருப்பதி தேவஸ்தானம் உலகிலேயே மிகவும் பணக்காரக்கோயில் கோயில் படியை தங்க தகட்டினால் மறைத்துவிட்டால் என்ன செய்வது என்று ஆழ்வார் மீண்டும் கலங்குகின்றார் (ஆழ்வார் திருவடிகளே சரணம்) 

(பதினாறு வயதில் அழகாய் இருப்பது பெருமையில்லை. அறுபது வயதில் அழகாய் இருப்பதே உன் சாதனை”)

ராகு, சனி கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 4, 8

அதிர்ஷ் வர்ணங்கள்: மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right