12 ராசிகளுக்குமான 19-05-2019 முதல் 25-05-2019 வரையான முழுமையான பலன்கள் ஒரே பார்வையில்...

2019-05-20 10:56:31

01. இனிமையாகப் பேசும் மேஷ ராசி அன்பர்களே!


அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம் கொண்ட மேடராசியினருக்கு எதிர்பாராத நன்மைகள் அமையும் . தொழில் நிலை சார்ந்த இலாபங்கள் சிறப்புகள் ஏற்படும். பணவரவு மிகவும் திருப்திகரமானதாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான பலன் அமையும். குடும்ப நிலை சார்ந்த நன்மைகள் இருக்கும். உறவினர்களின் மூலமாக நன்மைகள் ஏற்படும். பெண்களுக்கு நன்மையுண்டு, மாணவர்களுக்கு சிறப்புண்டு. அனுகூலமான நாள் திங்கள்,  நன்மையான திகதி 22. 


02. உறுதியான மனம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!


கார்த்திகை 2,3,4 ஆம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1,2 ஆம் பாதம் கொண்ட இடபராசியினருக்கு சற்று மனச் சஞ்சலங்கள் காரியத்தடைகள் தேவையற்ற அலைச்சல் நிலைகள் அமையும். உடல் நிலை சார்ந்த உபாதைகள் இருக்கும்.  பணவரவு சற்று மத்திமமானதாகவே இருக்கும்.   கடன் நிலைகளில் சற்று இழுபறி நிலை இருக்கும். உறவினர்களுடன் மனச் சஞ்சல நிலை அமையும். பெண்களுக்கு சஞ்சல நிலை. மாணவர்களுக்கு அலைச்சல் நிலை அனுகூலமான நாள் வெள்ளி, நன்மையான திகதி 24. 


03. காரியங்களை திறம்படச் செய்யும் மிதுன ராசி அன்பர்களே!


மிருகசீரிடம் 3,4 ஆம் பாதம் , திருவாதிரை, புனர்பூசம் 1, 2 , 3 ஆம் பாதம் கொண்ட மிதுனராசியினருக்கு சிறு சிறு மந்த நிலை இருக்கும். தொழில் சார்ந்த வேலைப்பளு அதிகமாக அமைந்திருக்கும். பணவரவு சற்று மத்திமமானதாகவே அமையும். எதிர்பாராத திடீர் செலவீனங்கள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் சிறு சிறு சிக்கல் இருக்கும்.  குடும்ப நிலை சார்ந்த பிரச்சினைகள் அமையும்.   பெண்களுக்கு மத்திம பலன். மாணவர்களுக்கு முயற்சி தேவை, அனுகூலமான நாள் புதன், நன்மையான திகதி 23


04. நண்பர்களிடம் அன்பு காட்டும் கடக ராசி அன்பர்களே!


புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம் , ஆயிலியம் கொண்ட கடகராசியினருக்கு அனுகூலமான  நன்மைகள் அமையும்.  தொழில் சார்ந்த இலாபங்கள் இருக்கும். பணவரவு மிகவும் திருப்திகரமானதாக அமையும். குடும்ப நிலை சார்ந்த நன்மைகள் ஏற்படும். தொழில் நிலையில் இலாபங்களும் சிறப்பும் இருக்கும். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான பலனிருக்கும். பெண்களுக்கு நன்மையுண்டு, மாணவர்களுக்கு சிறப்புண்டு.  அனுகூலமான நாள் திங்கள், நன்மையான திகதி 20.


05. முன்னேற்றச்செயல்களில் முன்நிற்கும் சிம்ம ராசி அன்பர்களே!


மகம், பூரம், உத்தரம் 1 ஆம் பாதம் கொண்ட சிம்மராசி அன்பர்களுக்கு தேவையற்ற அலைச்சல் நிலையிருக்கும். தொழில் சார்ந்த வேலைப்பளு அதிகமாக இருக்கும். பணவரவு சற்று மத்திமமானதாக அமையும். கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை ஏற்படும். எதிர்பாராத திடீர் பிரயாணங்கள் அமையும். குடும்ப நிலையில் மந்தமான பலன்கள் இருக்கும். பெண்களுக்கு மத்திம பலன், மாணவர்களுக்கு அலைச்சல் நிலை. அனுகூலமான நாள் ஞாயிறு, நன்மையான திகதி 24.        

06. தனித்தன்மையோடு செயல்படும் கன்னி ராசி அன்பர்களே!



உத்தரம் 2,3,4 ஆம் பாதம், அத்தம், சித்திரை 1,2 ஆம் பாதம் கொண்ட கன்னி ராசியினருக்கு    மிகவும் எதிர்பாராத நன்மைகள் அமையும் பலன்கள் அமைந்திருக்கும். பணவரவு மிகவும் திருப்திகரமானதாக இருக்கும். கடன் நிலைகளில் சுமுகமான பலன்கள் அமையும். தொழில் நிலை சார்ந்த இலாபங்கள் ஏற்படும். உறவினர்களின் மூலமாக நன்மைகள் அமையும்.  பெண்களுக்கு நன்மையுண்டு, மாணவர்களுக்கு சிறப்புண்டு. அனுகூலமான நாள் புதன்,  நன்மையான திகதி 23.


07. எச்சரிக்கையோடு இருக்கும் துலா ராசி அன்பர்களே!

சித்திரை 3 ,4 ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1,2 ,3 ஆம் பாதம் கொண்ட துலாராசியினருக்கு     சற்று மத்திமமான சுமாரான பலன்களே ஏற்படும். தொழில் நிலை சார்ந்த வேலைப்பளு தேவையற்ற அலைச்சல் நிலை என்பன இருக்கும் . குடும்ப நிலையில் சிறு சிறு பிரச்சினை இருக்கும். உடல் நிலை சார்ந்த சிறு உபாதை மனச்சஞ்சல நிலை அமையும். கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலையிருக்கும். பெண்களுக்கு சஞ்சல நிலை,  மாணவர்களுக்கு முயற்சி தேவை. அனுகூலமான நாள் வெள்ளி. நன்மையான திகதி 24. 



08. கலை நுணுக்கத்தோடு செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே!


விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம்,  கேட்டை கொண்ட விருட்சிக ராசியினருக்கு சற்று மத்திமமான பலாபலனே அமையும். தொழில் நிலையில் ஓரளவிற்கு அனுகூலமிருக்கும். குடும்ப நிலை சார்ந்த நன்மைகள் மகிழ்வு நிலையிருக்கும். பணவரவு ஓரளவிற்கு  தேவைகளைப் பூர்த்தி செய்யும். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான பலனிருக்கும். உறவினர்களின் மூலமாக நன்மைகள் இருக்கும்.  பெண்களுக்கு அனுகூல நிலை, மாணவர்களுக்கு சுமுக நிலை, அனுகூலமான நாள் திங்கள்,  நன்மையான திகதி 25.


09.பிறரது விருப்பத்தை நிறைவேற்றும் தனுசு ராசி அன்பர்களே!



மூலம், பூராடம், உத்தராடம் 1 ஆம் பாதம் கொண்ட தனுசு  ராசியினருக்கு சற்று  மனச்சஞ்சல நிலைகள் இருக்கும். தொழில் சார்ந்த வேலைப்பளு அலைச்சல் அமையும். பணவரவு சற்று  மத்திமமானதாகவே இருக்கும். கொடுக்கல் வாங்கலில் நிதானம் வேண்டும். உறவினர்களுடன் சஞ்சல நிலைகள் இருக்கும். தேவையற்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையிருக்கும். பெண்களுக்கு சஞ்சல நிலை, மாணவர்களுக்கு சிரம நிலை. அனுகூலமான நாள் வியாழன், நன்மையான திகதி 21.      


10. உறுதியான உள்ளம் கொண்ட மகர ராசி அன்பர்களே!



உத்தராடம் 2,3,4  ஆம் பாதம் , திருவோணம், அவிட்டம் 1,2ஆம் பாதம் கொண்ட மகர ராசியினருக்கு எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். தொழில் நிலை சார்ந்த முன்னேற்றமிருக்கும். பணவரவு மிகவும் திருப்திகரமான நிலையில் அமையும். குடும்ப நிலையில் மகிழ்வும் நன்மைகளும் இருக்கும். உறவினர்களின் மூலமாக நன்மைகள் அமையும். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை இருக்கும். பெண்களுக்கு நன்மையுண்டு,  மாணவர்களுக்கு சிறப்புண்டு, அனுகூலமான நாள் ஞாயிறு, நன்மையான திகதி 22.


11. தெளிவான சிந்தனை கொண்ட கும்ப ராசி அன்பர்களே!



அவிட்டம் 3,4 ஆம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம் பாதம் கொண்ட கும்பராசியினருக்கு சற்று அலைச்சல் நிலை இருக்கும். தொழில் சார்ந்த வேலைப்பளு அதிகமிருக்கும்.பணவரவு ஓரளவிற்கு தேவைகளைப் பூர்த்தி செய்யும். தாயார் வழியில் எதிர்பாராத செலவீனம் இருக்கும். குடும்ப நிலையில் சிறு சிறு மந்தமான பலனிருக்கும். உறவினர்களோடு சற்று சஞ்சல நிலைகள் இருக்கும். பெண்களுக்கு மத்திம பலன் ,  மாணவர்களுக்கு நன்மையுண்டு.  அனுகூலமான நாள் ஞாயிறு, நன்மையான திகதி 20. 

12. திறமையோடு கூடிய ஆற்றல் கொண்ட மீன ராசி அன்பர்களே!


பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி கொண்ட மீன ராசியினருக்கு காரியத் தடைகள் அதிகமிருக்கும். தொழில் சார்ந்த வேலைப்பளு அதிகமாக அமையும். குடும்ப நிலையில் சிறு சிறு பிரச்சினைகள் இருக்கும். சகோதரர்களுடன் சற்று சஞ்சலமான  நிலையிருக்கும். கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலையிருக்கும். பணவரவு ஓரளவிற்கு தேவைகளைப் பூர்த்தி செய்யும்.  பெண்களுக்கு மத்திம பலன், மாணவர்களுக்கு முயற்சி தேவை. அனுகூலமான நாள் வியாழன்,  நன்மையான திகதி 21.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right