நீ சிரித்து பார் உன் முகம் உனக்குபிடிக்கும், மற்றவர்களை சிரிக்க வைத்து பார் உன்முகம் எல்லோருக்கும் பிடிக்கும்: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (15.05.2019 )...!

2019-05-15 10:01:46

15.05.2019 ஸ்ரீ விகாரி வருடம் வைகாசி மாதம் 01 ஆம் நாள் புதன்­கி­ழமை. 

உத்­த­ரா­யணம், வஸந்­த­ருது ரிஷப மாதம்.

வளர்­பிறை ஏகா­தசி திதி காலை 9.47 வரை. அதன்மேல் துவா­தசி திதி. உத்­தரம் நட்­சத்­திரம் காலை 6.30 வரை. அதன்மேல் அஸ்தம் நட்­சத்­திரம். பின்­னி­ரவு 5.10 வரை. பின்னர் சித்­திரை நட்­சத்­திரம் (நட்­சத்­திர அவ­மாகம்) சிரார்த்த திதி சூன்யம். மர­ண­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் பூரட்­டாதி. சுப­நே­ரங்கள்: பகல் 10.30–11.30. மாலை 4.30–5.30 ராகு­காலம் 12.00–1.30. எம­கண்டம் 7.30–9.00. குளி­கை­காலம் 10.30–12.00 வார­சூலம் – வடக்கு (பரி­காரம்– பால்).  

மேடம் : இலாபம், ஆதாயம்

இடபம் : சுகம், ஆரோக்­கியம்

மிதுனம் : நிறைவு, மகிழ்ச்சி

கடகம் : வரவு, இலாபம்

சிம்மம் : செலவு, பற்­றாக்­குறை  

கன்னி : தடை, தாமதம் 

துலாம் : காரி­ய­சித்தி, அனு­கூலம் 

விருச்­சிகம் : களிப்பு, மகிழ்ச்சி

தனுசு : வெற்றி, யோகம்

மகரம் : பிரிவு, கவலை

கும்பம் : மகிழ்ச்சி, சந்­தோஷம்

மீனம் : கவலை, கஷ்டம்

விரு­ஷப ரவி பகல் 11.31 விஷ்­ணு­பதி புண்ய காலம். சுக்­கி­ல­பட்ச சர்வ ஏகா­தசி விரதம். இதற்கு மோகினி ஏகா­தசி என்று பெயர். திருப்­பாற்­க­டலை தேவர்­களும் அசு­ரர்­களும் மந்­தர மலையை மத்­தா­கவும், வாசுகி என்ற பாம்பை கயி­றா­கவும் கொண்டு கடைய மந்­தர மலை சரிய திருமால் கூர்ம (ஆமை) அவ­தாரம் கொண்டு மலையை நிலை­நி­றுத்த, அமிர்தம் வெளிப்­பட திருமால் மோகினி அவ­தாரம் எடுத்து வந்த நாள். இன்று புதன் ஜெயந்தி. புத­னையும் மகா­விஷ்­ணு­வையும் வழி­பட வித்தை ஞானம் பெருகும்.  

சுக்­கிரன், புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்: 9

பொருந்தா எண்கள்: 8–3

அதிர்ஷ்ட  வர்ணங்கள்: பச்சை, நீலம், சிவப்பு கலப்பு வர்ணங்கள்.  

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right