03.04.2016 மன்மத வருடம் பங்குனி மாதம் 21ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை

2016-04-04 09:40:12

கிருஷ்ண பட்ச ஏகாதசி திதி பின்னிரவு 1.47 வரை. அதன் மேல் துவாதசி திதி. திருவோணம் நட்சத்திரம் காலை 9.51 வரை பின்னர் அவிட்டம் நட்சத்திரம் சிரார்த்த திதி. தேய்பிறை ஏகாதசி அமிர்த யோகம். மேல் நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் பூசம். சுபநேரங்கள் காலை 7.30 – 8.30 பகல் 10.30 –11.30 மாலை 3.30 – 4.30. ராகுகாலம் 4.30 – 6.00 எமகண்டம் 12.00 – 1.30. குளிகை காலம் 3.00 – 4.30. வாரசூலம். மேற்கு (பரிகாரம் – வெல்லம்) கிருஷ்ண பட்ச ……… ஏகாதசி விரதம்.

 

மேடம் : அமைதி, தெளிவு

இடபம் : ஈகை, புண்ணியம்

மிதுனம் : ஓய்வு, அசதி

கடகம் : மறதி, விரயம்

சிம்மம் : ஊக்கம், உயர்வு

கன்னி : நன்மை, அதிர்ஷ்டம்

துலாம் : கவலை, கஷ்டம்

விருச்சிகம் : ஆதாயம், லாபம்

தனுசு : சுகம், ஆரோக்கியம்

மகரம் : லாபம், லஷ்மீகரம்

கும்பம் : அச்சம், பகை

மீனம் : காரியசித்தி, அனுகூலம்

குலசேகரஆழ்வார் அருளிய பெருமாள் திருமொழி திவ்ய பிரபந்தம் “பிறையேறு சடையாறும் பிரம்மனும் இந்திரனும் முறையாய பெருவேள்விக் குறை முடிப்பான் மறையானான் வெறியார் தன் சோலைத் திருவேங்கட மலை மேல் நெறியாய்க் கிடக்கும் நிலையுடையேனாவேனே” பொருளுரை – மூன்றாம் பிறை சந்திரனை சிரசில் தரித்து இடப வாகனத்தில் ஏறும் ஜடாமுடி தரித்த சிவனும் நான்முகனும் இந்திரனும் முறையாக பல யாகங்கள் செய்ய அவர்கள் இடர்களைத் தீர்த்த வேதங்களின் வடிவான திரு வேங்கட முடையானின் வாசனை வீசும் குளிர் சோலைகளையுடைய திருமலை மேல் பக்தர்கள் நடக்கும் பாதையாய் இருக்கும் பேற்றினைப் பெற வேண்டுகின்றேன். பாதைகள் செப்பனிடப்படாவிடில் என்ன செய்வது என்று ஆழ்வார் மீண்டும் கலங்குகின்றார். (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

(மனதின் கதவுகள் மூடி இருப்பினும் பிரார்த்தனையின் கதவுகள் திறந்தே இருக்கும்.

குரு, கேது கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்:  1 – 5

பொருந்தா எண்கள்:  6 – 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  மஞ்சள், இளஞ்சிகப்பு

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right