அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றைஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (06.05.2019 )...!

2019-05-06 10:59:47

06.05.2019 ஸ்ரீ விகாரி வருடம் சித்­திரை மாதம் 23 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை. 

சுக்­கில பட்ச துவி­தியை திதி பின்­னி­ரவு 4.12 வரை. கார்த்­திகை நட்­சத்­திரம் மாலை 5.24 வரை. பின்னர் ரோகிணி நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை துவி­தியை. மர­ண­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் விசாகம், அனுஷம். சுப­நே­ரங்கள்: காலை 9.30–10.30. மாலை 4.30–5.30 ராகு­காலம் 7.30–9.00. எம­கண்டம் 10.30–12.00. குளி­கை­காலம் 1.30–3.00 வார­சூலம் – கிழக்கு (பரி­காரம்– தயிர்). 

மேடம்: புகழ், பெருமை

இடபம்: நட்பு, உதவி

மிதுனம்: வரவு, லாபம்

கடகம்: பக்தி, ஆசி

சிம்மம்: வெற்றி, அதிர்ஷ்டம்  

கன்னி: பணம், பரிசு 

துலாம்: பகை, விரோதம் 

விருச்­சிகம்: புகழ், பாராட்டு

தனுசு: தெளிவு, அமைதி

மகரம்: பிரிவு, கவலை

கும்பம்: புகழ், பெருமை

மீனம்: போட்டி, ஜெயம்

கார்த்­திகை விரதம். முரு­கப்­பெ­ரு­மானை வழி­படல் நன்று. சந்­திர தரி­சனம். உய்யக் கொண்டார் திரு நட்­சத்­திரம். வால வெய்யோன் தனை வென்ற வடி­வ­ழகன் வாழியே மால் மணக்கால் நம்பி தொழும் மலர் பதத்தோன் வாழியே. மால­ரங்க மண­வாளர் வள­மு­ரைப்போன் வாழியே வையம் உய்யக் கொண்­ட­வர்தான் வைய­கத்தில் வாழியே! (ஸ்ரீ வைஷ்­ணவ குரு­ப­ரம்­பரை)

(“வயது காதலைப் போன்­றது. மறக்க முடி­யா­தது” – தாமஸ் டிக்கர்)

சுக்­கிரன், புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5–9

பொருந்தா எண்கள்: 8–3

அதிர்ஷ்ட  வர்­ணங்கள்: பச்சை, நீலம், சிவப்பு. 

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right