02.04.2016 மன்மத வருடம் பங்குனி மாதம் 20ஆம் நாள் சனிக்கிழமை

2016-04-02 16:44:44

கிருஷ்ணபட்ச தசமி திதி பின்னிரவு 3.12 வரை. அதன் மேல் ஏகாதசி திதி.உத்தராடம் நட்சத்திரம் பகல்10.15 வரை திருவோணம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை தசமி. சித்தயோகம் மேல் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் புனர் பூசம். சுபநேரங்கள் காலை 7.30– 9.00, 10.30– 11.30, மாலை 4.30– 5.30 ராகு காலம் 9.00– 10.30, எமகண்டம் 1.30– 3.00, குளிகை காலம் 6.00– 7.30, வாரசூலம் கிழக்கு (பரிகாரம்– தயிர்) திருவோண விரதம்.

மேடம் அமைதி, நிம்மதி

இடபம் பகை, விரோதம்

மிதுனம் வரவு, லாபம்

கடகம் துன்பம், கவலை

சிம்மம் புகழ், பெருமை

கன்னி உயர்வு, மேன்மை

துலாம் ஈகை, புண்ணியம்

விருச்சிகம் மறதி, விரயம்

தனுசு பொறுமை, நிதானம்

மகரம் நிறைவு, பூர்த்தி

கும்பம் போட்டி, ஜெயம்

மீனம் அன்பு, பாசம்.

குல­சே­க­ராழ்வார் அரு­ளிய பெருமாள் திரு­மொழி பாசுரம்" வானாளும் மாம­திபோல் வெண்­குடைக் கீழ் மன்­ன­வர்தம் கோனாகி வீற்­றி­ருந்து கொண்­டாடும் செல்­வ­றியேன் தேனார் பூஞ்­ சோலைத் திரு­வேங்­கட மலைமேல் கானாறாய்ப் பாயும் கருத்­து­டையே னாவேனே"! பொரு­ளுரை: இர­விலே ஆகா­யத்தை ஆளும் பூரண சந்­தி­ரனைப் போல் மன்னர்க் கெல்லாம் மன்­ன­னாக அர­சாளும் ராஜ­போ­கத்தை வேண்டேன். தேன் நிறைந்த பூக்­களைக் கொண்ட சோலை­க­ளை­யு­டைய திரு­வேங்­கட மலை மீது ஒரு ஆறாக பாயும் பேறு கிடைத்தால் அதுவே பாக்­கி­ய­மாகக் கரு­துவேன். கோடை­கா­லத்தில் ஆறு வற்­றி­விட்டால் என்ன செய்­வது? என்று ஆழ்வார் மீண்டும் கலங்­கு­கின்றார். (ஆழ்வார் திரு­வ­டி­களே சரணம்) (“குத்­து­வி­ளக்கு அதன் அடியில் ஒளி தரு­வ­தில்லை”) சந்­திரன், சுக்­கிரன் கிர­கங்­களின் ஆதிக்­க­நா­ளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 7, 6

பொருந்தா எண்கள்: 9, 8, 3

அதிர்ஷ்ட வர்ணம்: அடர் பச்சை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right