போகும்போதே என்னை ரசித்துகொண்டே போ, திரும்பி வரமாட்டேன் உனக்காக...இப்படிக்கு - வாழ்க்கை.: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (26.04.2019 )...!

2019-04-26 10:26:11

26.04.2019 ஸ்ரீவிகாரி வருடம் சித்திரை மாதம் 13 ஆம் நாள் வெள்ளிக்கிழமை.

கிருஷ்ண பட்ச ஸப்தமி திதி மாலை 5.23 வரை. பின்னர் அஷ்டமி திதி. உத்திராடம் நட்சத்திரம் பின்னிரவு 1.28 வரை. அதன்மேல் திருவோணம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை ஸப்தமி.  சித்தயோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் புனர்பூசம், திருவாதிரை. சுபநேரங்கள்: பகல் 10.00 – 10.30. மாலை 4.30–5.30 ராகுகாலம் 10.30–12.00 எமகண்டம் 3.00–4.30. குளிகைகாலம் 7.30–9.00 வாரசூலம் – மேற்கு (பரிகாரம்– வெல்லம்). 

மேடம் : தடை, தாமதம்

இடபம் : -சுகம், ஆரோக்கியம்

மிதுனம் : வரவு, லாபம்

கடகம் :  சிக்கல், சங்கடம்

சிம்மம் : முயற்சி, முன்னேற்றம் 

கன்னி : பகை, எதிர்ப்பு

துலாம் : லாபம், லக் ஷ்மீகரம்

விருச்சிகம் : கவலை, கஷ்டம்

தனுசு : பகை, விரோதம்

மகரம் :  நட்பு, உதவி

கும்பம் : தடை, இடையூறு

மீனம் :  களிப்பு, மகிழ்ச்சி

சைவ சித்தாந்த சிவ வடிவங்கள் 64. அவை இலிங்க மூர்த்தி தற்காலத்தில் சிவன் கோயில்களில் மூலஸ்தான மூர்த்தியாக கர்ப்பக்கிரகத்தில் காணப்பெறும் சிவவடிவம். இலிங்கோற்பவர் சிவன் அடி முடி காண இயலாத வடிவம். இந்நிலை திருவண்ணாமலையில் நிகழ்வுற்றதென்பர். மகேஸ்வர வடிவங்களில் இதுவும் ஒன்று என்பர். இதன் அருட்சக்தி மோட்சப் பிரதாயினி எனப்பெறும். (தொடரும்) 

சனி, சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண் : 6

பொருந்தா எண்கள் : 8–3

அதிர்ஷ்ட  வர்ணங்கள் : நீலம்,பச்சை

இராமரத்தினம் ஜோதி 

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right