01.04.2016 மன்­மத வருடம் பங்­குனி மாதம் 19 ஆம் நாள் வெள்ளிக்கிழமை

Published on 2016-04-02 16:43:25

கிருஷ்­ண­பட்ச நவமி திதி பின்­னி­ரவு 4.11 வரை. அதன்மேல் தசமி திதி பூராடம் நட்­சத்­திரம் பகல் 10.12 வரை. பின்னர் உத்­த­ராடம் நட்­சத்­திரம் சிரார்த்த திதி தேய்­பிறை நவமி சித்­த­யோகம். கரிநாள். சுபம்­வி­லக்­குக. கீழ்­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் திரு­வா­திரை. சுப­நே­ரங்கள் காலை 9.30 – 10.30, மாலை 4.30 – 5.30, ராகு காலம் 10.30 – 12.00, எம­கண்டம் 3.00 – 4.30, குளிகை காலம் 7.30 – 9.00, வார­சூலம் மேற்கு (பரி­காரம் வெல்லம்)

மேடம் : நன்மை, யோகம்

இடபம் : செலவு, விரயம்

மிதுனம் : லாபம், லஷ்­மீ­கரம்

கடகம் : போட்டி, ஜெயம்

சிம்மம் : விவேகம், வெற்றி

கன்னி : தடங்கல், கவலை

துலாம் : அமைதி, தெளிவு

விருச்­சிகம் : அமைதி, சாந்தம்

தனுசு : அன்பு, மகிழ்ச்சி

மகரம் : இன்பம், சந்­தோசம்

கும்பம் : வெற்றி, யோகம்

மீனம் : இன்பம், சுகம்

குல சேக­ராழ்வார் அரு­ளிய “பெருமாள் திரு­மொழி” திருப்­ப­தியில் பிறக்க அவா­வு­றுதல் பாசுரம் “மின்­ன­னைய நுண்­ணி­டையார் உருப்­ப­சியும் மேன­கையும் அன்­னவர் தம் பாட­லொடும் ஆட­லவை ஆத­ரியேன் தென்ன என வண்­டி­னங்கள் பண்­பாடும் வேங்­க­டத்துள் அன்­ன­னைய பொற்­கு­வடாம் அருந்­த­வந்­த­னா­வேனே! பொரு­ளுரை: மின்னல் போன்ற துண்­ணிய இடை­யை­யு­டைய ஊர்­வ­சியும் மேன­கையும் போன்ற தேவ நங்­கையர் ஆடலும் பாடலும் விரும்­ப­வில்லை. அவை நடக்கும் இந்­திர சபையில் வீற்­றி­ருக்க நான் விரும்­ப­வில்லை. வண்­டு­களின் கூட்டம் தென தென என ரீங்­க­ரிக்கும் திரு­வேங்­க­ட­ம­லையில் பொன்­ம­ய­மான சிக­ர­மா­வ­தற்­கு­ரிய கடுந்­தவம் செய்­த­வ­னா­வ­தையே வேண்­டு­கிறேன். சிக­ர­மான மலையை வெட்டி பாதை அமைத்தால் நான் எவ்­வாறு வேங்­க­ட­லனை தரி­சிப்பேன் என்று வேறொரு பிற­விக்­காக ஆழ்வார் பிரார்த்­திக்­கின்றார். (ஆழ்வார் திரு­வ­டி­களே சரணம்) (“முதுமை என்­பது எல்லா நோய்­க­ளையும் ஏற்றுக் கொள்ளும் மருத்­து­வ­மனை”) சூரியன், புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: சாம்பல் நிறம், மஞ்சள்