குறுகிய காலத்தில் எடுக்கப்படும் முடிவுகள், பின்னர் யோசிக்கையில் மனத்திருப்தியற்றதாகவே இருக்கும்: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (27.03.2019 )...!

2019-03-27 09:49:13

27.03.2019 விளம்­பி­வ­ருடம் பங்­குனி மாதம் 13 ஆம் நாள் புதன்­கி­ழமை  

கிருஷ்­ணப்­பட்ச ஸப்­தமி திதி பின்­ன­ரவு 1.46 வரை அதன்மேல் அஷ்­டமி திதி. கேட்டை நட­சத்­திரம் பகல் 12.57 வரை. பின்னர் மூலம் நட­ச­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை ஸப்­தமி சித்­த­யோகம் பகல் 12.57 வரை பின்னர் மர­ண­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள். கார்த்­திகை ரோகிணி. சுப­நே­ரங்கள் பகல் 10.30 11.30 மாலை 4.30 5.30 ராகு­காலம் 12.00 1.30 எம­கண்டம் 7.30 9.00 குளி­கை­காலம் 10.30 12.00 வார­சூலம் வடக்கு (பரி­காரம் பால்)

மேடம் : நலம், ஆரோக்­கியம்

இடபம் : துணிவு, துணை

மிதுனம் : முயற்சி, முன்­னேற்றம்

கடகம் :  ஆதாயம், லாபம்

சிம்மம் : புகழ், பாராட்டு

கன்னி : இலாபம், லக்ஷ்­மி­கரம்

துலாம் : கோபம், சினம்

விருச்­சிகம் : பொறுமை, அமைதி

தனுசு : போட்டி, ஜெயம்

மகரம் : நிறைவு, பூர்த்தி

கும்பம் : பக்தி, ஆசி

மீனம் : ஊக்கம், உயர்வு

"சிவ­சின்­னங்கள்" சிவனின் கண்கள் உத்­தி­ராட்ஷம். உருத்­திரன் என்றால் தீமைகள் அழிப்­பவர் என்று பொரு­ளாகும். "ருத்­தி­ரா­வ­ய­தி­இ­தி­ருத்­ரஹ" என்­பது வாக்­கியம். ருத், ரோத், ரோதம் என்றால் நமக்கு ஏற்­படும் இன்­னல்கள், கஷ்­டங்கள் குறிக்கும் சொல்­லாகும். அதனால் தான் கஷ்­டங்­களால் வரும் அழு­கைக்கு "ரோதனம்" என்று பெயர் ஏற்­பட்­டது. த்ராவ­யதி என்றால் கஷ்­டங்கள் விரட்­டு­கிற, அழிக்­கிற ஆற்றல் மிக்­கவன் என்­பது பொரு­ளாகும். அதனால் சிவன் உருத்­திரன் ஆகிறான். உருத்­திரன் என்­பது சிவன் அட்சம் என்றால் கண். உருத்­திரன் + அட்சம் உருத்­தி­ராட்ஷம். இதுவே தமிழில் சிவனின் கண்கள் என்­றா­னது. (தொடரும்)

செவ்வாய் சுக்­கிரன் கிர­கங்­களின் நாளின்று. 

அதிஷ்ட எண்கள் 3 5 6 

பொருந்தா எண்கள் 2 9 8

அதிர்ஷ்ட வர்ணங்கள் நீலம் மஞ்சள்.  

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right