31.03.2016 மன்மத வருடம் பங்குனி மாதம் 18 ஆம் நாள் வியாழக்கிழமை

2016-03-31 07:59:42

கிருஷ்ணபட்ச அஷ்டமி திதி பின்னிரவு 4.41 வரை. பின்னர் நவமி திதி மூலம் நட்சத்திரம் காலை 9.40 வரை. பின்னர் பூராடம் நட்சத்திரம் சிரார்த்த திதி தேய்பிறை. அஷ்டமி சித்தயோகம் கீழ்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் மிருக சீரிஷம். சுபநேரங்கள் காலை 10.30 – 11.30, பிற்பகல் 12.30 – 1.30, ராகு காலம் 1.30 – 3.00, எமகண்டம் 6.00 – 7.30, குளிகை காலம் 9.00 – 10.30, வார சூலம் – தெற்கு (பரிகாரம் – தைலம்)

மேடம்: உதவி, நட்பு

இடபம்: தடை, தாமதம்

மிதுனம்: பணிவு, செல்வாக்கு 

கடகம்: அசதி, வருத்தம்

சிம்மம்: அன்பு, பாசம்

கன்னி: பரிவு, பாசம்

துலாம்: தனம், சம்பத்து

விருச்சிகம்: கவனம், எச்சரிக்கை

தனுசு: நட்பு, உதவி

மகரம்: சுகம், ஆரோக்கியம்

கும்பம்: ஜெயம், புகழ்

மீனம்: புகழ், பெருமை

பெருமாள் திருமொழி குலசேகராழ்வார் அருளியது "கம்ப மத யானைக் கழுத்தகத்தின் மேலிருந்து இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான். வேண்டேன். எம் பெருமான் ஈசன் எழில் வேங்கடமலை மேல் தம்பகமாய் நிற்கும் தவமுடையேனாவேனே! பொருளுரை தன்னைக் கண்டவர்கள் அஞ்சும்படியான மதயானையின் கழுத்தில் வீற்றிருந்து இன்பங்கள் அனுபவிக்கும் படியான செல்வத்தையும் அரசாட்சியையும் நான் விரும்பவில்லை. எம் பெருமான் எழுந்தருளி இருக்கும் அழகுடைய திருவேங்கடமலை மேல் புல்லாகவோ அல்லது புதராக இருக்கும் படியான பேறு கிடைக்க வேண்டுமென்பதே என் ஆசை. புல்லையும் புதரையும் பசுக்கள் மேய்ந்துவிட்டால் என்ன செய்வது என்று மீண்டும் ஆழ்வார் கவலைப்படுகின்றார். ஆழ்வார் திருவடிகளே சரணம்.

(சொல்தையெல்லாம் யோசித்து சொல்பவன் புத்திசாலி. நினைப்பதையெல்லாம் சொல்பவன் முட்டாள்) 

ராகு, கேது கிரகங்களின் ஆதிக் நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்; 2, 1, 5, 6

பொருந்தா எண்கள்: 7, 4, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்; மஞ்சள், நீலம், பச்சை

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right