நல்லவனா இருந்தா..கடைசி வரை நல்லவனாவே இருக்கலாமேதவிர நல்லா இருக்க முடியாது: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (18.03.2019 )...!

2019-03-18 10:23:03

18.03.2019 விளம்பி வருடம் பங்­குனி மாதம் 04 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை

சுக்­கில பட்ச துவா­தசி திதி பகல் 2.44 வரை. பின்னர் திர­யோ­தசி திதி. ஆயில்யம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 7.07 மணி வரை. பின்னர் மகம் நட்­சத்­திரம். திதித்­வயம் சிரார்த்த திதி வளர்­பிறை துவா­தசி திர­யோ­தசி. சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் உத்­தி­ராடம், திரு­வோணம். சுப­நே­ரங்கள் காலை 9.30 –10.30, மாலை 4.30 –5.30, ராகு­காலம் 7.30 –9.00, எம­கண்டம் 10.30 –12.00, குளிகை காலம் 1.30 –3.00, வார­சூலம் கிழக்கு. (பரி­காரம் தயிர்) சுக்­கில பட்ச மகா பிர­தோஷம் சிவ­வ­ழி­பாடு நந்தி தேவர் தரி­சனம் நன்று.

மேடம் : ஜெயம், வெற்றி

இடபம் : புகழ், பெருமை

மிதுனம் : அசதி, சோர்வு

கடகம் :  பகை, விரோதம்

சிம்மம் : உழைப்பு, உயர்வு

கன்னி : களிப்பு, மகிழ்ச்சி

துலாம் : நன்மை, அதிர்ஷ்டம்

விருச்­சிகம் : புகழ், சாதனை

தனுசு : இலாபம், லக்ஷ்­மீ­கரம்

மகரம் : அச்சம், பகை

கும்பம் : திறமை, முன்­னேற்றம்

மீனம் : யோகம், அதிர்ஷ்டம்

சைவ­சித்­தாந்த கொள்கைகள் சகலர். இவர்கள் ஆணவம், கன்மம், மாயை எனும் மும்­ம­லங்­களை உடை­ய­வர்கள். இவர்­கட்கு கார­ண­ச­ரீரம், பஞ்­சக சுக­ச­ரிரர், குண­ச­ரிரர் எனப் பெறும் பர­ச­ரீ­ரங்கள் மூன்று பிரா­ண­மய கோசம் எனப்பெறும். சூக்­கும சரீரம் ஒன்றும் அன்னமய கோசம் எனப்­பெறும் தூல சரிரம் ஒன்றும் கூடி­ய­தாக உள்­ளன. தாம் செய்யும் வினை­க­ளுக்கு ஏற்ப பிறப்பும் இறப்பும் அடையும் தன்மை உடை­யன. இறைவன் மானுட சட்டை தாங்கி குரு வடிவாய் எழுந்­த­ருளி மந்­தரம், மந்தம், தீவிரம், தீவி­ர­தரம் சமய தீட்­சையால் சரியை வினை­யையும் விசேட தீட்­சையால் கிரியை வினை­யையும் நிர்­வாண தீட்­சையால் ஞானத்­தையும் அருளி மும்­ம­லங்­க­ளையும் போக்கி அருள்­கிறார். (சைவ­ச­மயக் கொள்­கைகள் தொடரும்)

செவ்வாய், சுக்­கிரன் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

பொருந்தா எண்கள்: 2, 3, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: அடர்பச்சை, அடர்நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right