30.03.2016 மன்மத வருடம் பங்குனி மாதம் 17ஆம் நாள் புதன்கிழமை

Published on 2016-03-30 07:46:04

கிருஷ்ணபட்ச ஸப்தமி திதி பின்னிரவு 4.41 வரை. அதன் மேல் அஷ்டமிதிதி. கேட்டை நட்சத்திரம் காலை 8.39 வரை. பின்னர் மூலம் நட்சத்திரம் சிரார்த்த திதி. தேய்பிறை. ஸப்தமி சித்தயோகம் காலை 8.39 வரை. அதன் மேல் மரணயோகம். சுபநேரங்கள் காலை 9.30 – 10.30. மாலை 3.30 – 4.30. ராகுகாலம் 12.00 – 1.30. எமகண்டம் 7.30 – 9.00. குளிகை காலம் 10.30 – 12.00 வாரசூலம். வடக்கு (பரிகாரம் – பால்) சம நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் ரோகினி)

 

மேடம் : காரியசித்தி, அனுகூலம்

இடபம் : நிறைவு, பூர்த்தி

மிதுனம் : அன்பு, ஆதரவு

கடகம் : தொல்லை, சங்கடம்

சிம்மம் : அமைதி, நிம்மதி

கன்னி : பிரயாணம், அலைச்சல்

துலாம் : புகழ், பாராட்டு

விருச்சிகம் : கவனம், எச்சரிக்கை

தனுசு : உற்சாகம், வரவேற்பு

மகரம் : புகழ், செல்வாக்கு

கும்பம் : சிரமம், தடை

மீனம் : உழைப்பு, உயர்வு

திவ்ய பிரபந்தம் குலசேகர ஆழ்வார் அருளிய பெருமாள் திருமொழி “ஒண்பவள வேலையுலவுதண் பாற்கடலுள் கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு பண்பகரும் வண்டினங்கள் பண்பாடு வேங்கடத்துச் செண்பகமாய் நிற்கும் திருவுடையேனாவேனே” பொருளுரை ஒளி பொருந்திய பவளக்கொடிகளை கரையில் தள்ளும் அலைகளையுடைய திருப்பாற் கடலில் யோக நித்திரை செய்தரளும் மாயவன் திருவடிகளைக் காண்பதற்கு, இசையே மொழியாக கொண்டிருக்கும் வண்டினங்கள் பண்ணிசை முழங்கும் திருவேங்கட மலையில் செம்பக மலராய் இருக்கும் பேறு வேண்டும். (காலையில் மலர்ந்த  செண்பக மலர் மாலையில் வாடிவிட்டால் என்ன செய்வது? என்று ஆழ்வார் மீண்டும் கவலைப்படுகின்றார்) ஆழ்வார் திருவடிகளே சரணம்)

“சொல்வதையெல்லாம் யோசித்து சொல்பவன் புத்திசாலி. நினைப்பதையெல்லாம் சொல்பவன் முட்டாள்”

குரு, சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்:  9

பொருந்தா எண்கள்:  3 – 6 – 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)