நாளை கனவைபோன்றது..இன்றைய நிஜத்தை ரசித்திடு : இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (11.03.2019 )..!

2019-03-11 09:42:00

11.03.2019 விளம்பி வருடம் மாசி மாதம் 27 ஆம் நாள்  திங்­கட்­கி­ழமை

சுக்­கில பட்ச பஞ்­சமி திதி பின்­னி­ரவு 2.22 வரை. அதன் மேல் ஷஷ்டி திதி. பரணி நட்­சத்­திரம் பின்­னி­ரவு 1.59 வரை. பின்னர் கார்த்­திகை நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை பஞ்­சமி. சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் சித்­திரை, சுவாதி. சுப­நே­ரங்கள் காலை 9.30 – 10.30, மாலை 4.30 – 5.30, ராகு­காலம் 7.30 – 9.00, எம­கண்டம் 10.30 –12.00,  குளிகை காலம் 1.30 – 3.00, வார­சூலம் கிழக்கு. (பரி­காரம் தயிர்) 

மேடம் : உழைப்பு, உயர்வு

இடபம் : தெளிவு, அமைதி

மிதுனம் : உதவி, நட்பு

கடகம் :  இன்பம், மகிழ்ச்சி

சிம்மம் : உண்மை, உறுதி

கன்னி : விருத்தி, நன்மை

துலாம் : அன்பு, பாசம்

விருச்­சிகம் : நட்பு, உதவி

தனுசு : களிப்பு, மகிழ்ச்சி

மகரம் : தடை, தாமதம்

கும்பம் : சுகம், இன்பம்

மீனம் :இன்சொல், காரி­ய­சித்தி

சைவ சித்­தாந்த கோட்­பா­டுகள் பாசத் தின் இயல்­புகள் ஆணவம், மாயை, கன்மம் என பாவங்கள் மூன்று வகைப்­படும். ஆணவம் அறி­யாமை மிக உண்­டா­கும்­படி ஆன்­மாக்­க­ளிடம் தொன்று தொட்டு உள்­ளதாகும். அவை மோகம், மதம், ராகம், கவலை,தாபம், வாட்டம், விசித்­திரம் என்னும் ஏழு ஆகும். மாயா­மலம் உயிர்­க­ளுக்கு தனு, கரண, புவன போகங்­களை கொடுத்து மயக்­கங்­களை ஏற்­ப­டுத்தும் மாயா­க­ரண மல­மாகும். இது சுத்த மாயை அசுத்த மாயை பிர­கிந்தி மாயை என மூவ­கைப்­படும் கன்ம மலம் ஆன்­மாக்கள் தோறும் விரிந்து அனு­ப­வமாய் நிற்­பது. இது சஞ்­சிதம் பிர­ாரத்­துவம், ஆகா­மியம் என மூவ­கைப்­படும். (நாளை தொடரும்)

சந்­திரன், சனி கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்:  7, 1, 5, 6

பொருந்தா எண்கள்:  9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right