எதிர்ப்பவரிடம் துணிந்து நில்.. மதிப்பவரிடம் பணிந்துச்செல்.. : இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (08.03.2019 )..!

2019-03-08 10:25:10

08.03.2019 விளம்பிவருடம் மாசிமாதம் 24 ஆம் நாள் வெள்ளிக்கிழமை.

சுக்கிலபட்ச துவிதியை திதி பின்னிரவு 01.10 வரை. பின்னர் திரிதியை திதி. உத்தரட்டாதி நட்சத்திரம் முன்னிரவு 10.56 வரை. பின்னர்  ரேவதி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை துவிதியை. சித்தாமிர்த யோகம் மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் பூரம் உத்திரம் சுபநேரங்கள் காலை 09.30 –10.30 மாலை 04.30 –05.30 ராகுகாலம் 10.30–12.00 எமகண்டம் 03.00–04.30 குளிகைகாலம் 07.30–09.00 வாரசூலம் மேற்கு (பரிகாரம் வெல்லம்) சந்திர தரிசனம்.

மேடம் : உதவி, நட்பு

இடபம் : பக்தி, அனுக்கிரகம்

மிதுனம் : உயர்வு, மேன்மை

கடகம் : சினம், பகை

சிம்மம் : இன்பம், மகிழ்ச்சி

கன்னி : தனம், சம்பத்து

துலாம் : நிறைவு, மகிழ்ச்சி

விருச்­சிகம் : பணம், பரிசு

தனுசு : திறமை, முன்னேற்றம்

மகரம் : முயற்சி, முன்னேற்றம்

கும்பம் : குழப்பம், சஞ்சலம் 

மீனம் : உயர்வு, மேன்மை

சிவன்,சைவ சித்தாந்தங்கள் என்பன பதி--/இறை, பசு/உயிர், பாசம்/ஆணவம் கன்மம்,  மாயை என மூவகைப்படும்.  இவற்றுள் பதி/இறை முதன்மை சர்வவல்லமையுள்ள கடவுள் சிவபெருமான் ஒருவரே போற்றி வணங்கக்கூடிய முழுமுதற்கடவுள். ஆதியும், அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதி. உலக உயிர்களோடு ஒன்றியும், வேறா யும் உடனாயும் உள்ளான். சத்தும் இன்றி அசத்தும் இன்றி சிவசத்தாய் விளங்குகின் றான். அருவாகவும் உருவாகவும் அருவுரு வா கவும் திகழ்ந்து உலக உயிர்களுக்கு அருள்பாலிக்கின்றார். தவமும் தியானமும் வல்லார்க்குச் சிவன் ஞானத்தை வழங்கு கின்றார். எண்குணங்களை உடையவன். அவை நாளை தொடரும்.    

சனி புதன் கிரகங்களின் நாளின்று.

அதிர்ஷ்ட எண்– 1, 5 

பொருந்தா எண்கள்– 7, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்– மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட ஆலோசனை -– ஸ்ரீவெங்கடா ஜலபதியை வணங்க விஷ்ணுவின் அருள் ஏற்படும். இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right