29.03.2016 மன்மத வருடம் பங்குனி மாதம் 16 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை

Published on 2016-03-29 07:32:51

கிருஷ்ண பட்ச சஷ்டி திதி பின்னிரவு 4.10 வரை. அதன் மேல் ஸப்தமி திதி அனுஷம் நட்சத்திரம் காலை 7.09 வரை. பின்னர் கேட்டை நட்சத்திரம் சிரார்த்த திதி தேய்பிறை சஷ்டி சித்தயோகம் சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் கார்த்திகை. சுபநேரங்கள்  காலை 7 .30– 8.30, பகல் 10.30– 11.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 3.00 – 4.30, எமகண்டம் 9.00 – 10.30, குளிகை காலம் 12.00 – 1.30, வார சூலம் வடக்கு (பரிகாரம் – பால்) கிருஷ்ணபட்ச சஷ்டி முருகனை வழிபடல் நன்று.

மேடம்: அமைதி, தெளிவு

இடபம்: நிறைவு, பூர்த்தி

மிதுனம்: கவனம், எச்சரிக்கை 

கடகம்: நன்மை, யோகம்

சிம்மம்: அன்பு, பாசம்

கன்னி: நலம், ஆரோக்கியம்

துலாம்: போட்டி, ஜெயம்

விருச்சிகம்: முயற்சி, முன்னேற்றம்

தனுசு: உயர்வு, மேன்மை

மகரம்: நற்செயல், பாராட்டு

கும்பம்: அசதி, வருத்தம்

மீனம்: இலாபம், லஷ்மீகரம்

குலசேகராழ்வார் அருளிய பெருமாள் திருமொழி பாசுரம் ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன். தேனன் பூஞ்சோலைத் திரு வெங்கடசுனையில் மீனாய் பிறக்கும் விதியுடையேனாவேனே. பொருளுரை: குறையற்ற செல்வத்தையுடைய அழகு தேவ மங்கையர் என்னைச் சூழ்ந்து நிற்க அமராவதியை ஆள்கின்ற செல்வமும் பூவுலகை ஒரு குடையின் கீழ் ஆளும் படியான சக்கரவர்த்தி பதவியும் எனக்கு வேண்டாம். தேன் நிறைந்த மலர்ச் சோலைகளை உடைய திரு வேங்கடத்து சுனைகளில் ஒரு மீனாய் பிறக்கும் பாக்கியம் கிடைத்தால் அதுவே பெரும் மகிழ்ச்சி. மீனை கொக்கு கொத்தி எடுத்துவிட்டால் என்ன செய்வது மீண்டும் கவலைப்படுகின்றார் ஆழ்வார் (ஆழ்வார் திருவடிகளே சரணம்) 

(“சிறிதளவு பணம் உள்ளவன் ஏழையல்ல ஆசை அதிகம் உள்ளவனே ஏழை”)

சந்திரன், புதன் ஆதிக்கம் கொண்ட இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

பொருந்தா எண்கள்: 8, 9, 6

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)