27.03.2016 மன்மத வருடம் பங்குனி மாதம் 14 ஆம் நாள் ஞாயிற்றுகிழமை.

Published on 2016-03-26 08:48:40

 

சுபயோகம்

27.03.2016 மன்மத வருடம் பங்குனி மாதம் 14 ஆம் நாள் ஞாயிற்றுகிழமை.

கிருஷ்ணபட்ச சதுர்த்தி திதி பின்னிரவு 1.42 வரை. அதன் மேல் பஞ்சமி திதி. விசாகம் நட்சத்திரம். பின்னிரவு 5.14 வரை. பின்னர் அனுஷம் நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை சதுர்த்தி திதி. மரணயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் அனுஷம்.  சுபநேரங்கள் காலை 7.30 – 8.30, மாலை 3.30 – 4.30 ராகு காலம் 4.30 –6.00. எமகண்டம் 12.00 – 1.30. குளிகை காலம் 3.00 – 4.30. வாரசூலம் –மேற்கு (பரிகாரம் – வெல்லம்) சங்கடஹர சதுர்த்தி விரதம் விநாயகரை வழிபடல் நன்று. 

மேடம்: லாபம், லஷ்மீகரம்

இடபம்: அச்சம், பகை

மிதுனம்: உதவி, நட்பு

கடகம்: வரவு, லாபம்

சிம்மம்: பகை, விரோதம்

கன்னி: நன்மை, அதிர்ஷ்டம்

துலாம்: செலவு, விரயம்

விருச்சிகம்: ஆதாயம், லாபம்

தனுசு: சுகம், ஆரோக்கியம்

மகரம்: அசதி, வருத்தம்

கும்பம்: கவலை, கஷ்டம்

மீனம்: தடை, தாமதம்

நான்காம் திருமொழி குலசேகர ஆழ்வார் அருளியது. (திருப்பதியில் பிறக்க அவாவுறுதல்) நாளை முதல் தொடரும் எப்படியெல்லாம் திருமலை திருப்பதியில் பிறந்து ஸ்ரீவெங்கடேசனை தரிசிக்க ஆசைப்படுகின்றார் ஆழ்வார் என்பதனை முதல் பாசுரமான "ஊனேறு செல்வத்து" முதல் 10 ஆம் பாசுரமான " உம்பர் உலகாண்டு" பாசுரம் வரை உள்ளவற்றை விளக்குவோம். 

( "உழைப்பு உடலைப் பலப்படுத்தினால் துன்பங்கள் மனதைப் பலப்படுத்தும்")

 செவ்வாய், குரு கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 3, 9

பொருந்தா எண்கள் 2, 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், சிவப்பு

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)