15.01.2019 விளம்பி வருடம் தை மாதம் முதலாம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை

2019-01-15 10:32:59

தைப்­பொங்கல் பண்­டிகை. உழவர் திருநாள். தமிழர் பண்­டிகை. யாக்ஞ வல்கி­யர்க்கு சூரி­யனே சுக்ல யஜுர் வேதத்தை உப­தே­சித்த படியால் அவ்­வே­தங்கள் ஆதித்­யர்கள் எனவும் கீதை­யிலே ஸ்ரீகி­ருஷ்ணன் ஆதித்­யர்­களில் நான் சூரி­ய­னாக சூரிய நாரா­ய­ண­னாக இருக்­கிறேன் என்றார். இன்று பொங்கல் வைத்து சூரிய வழி­பாடு செய்தல் சிறப்­பு­டை­யது. ஆதித்­தனை பற்றி ஆகமக் குறிப்­பு­களும் சூரியன் பெரு­மையைப் பேசு­கின்­றன.

சூரி­யனின் மகர ராசி (மக­ர­சங்­கி­ராந்தி) பலன்கள் ரேவதி, அஸ்­வினி, பரணி பொருள் விர­யமும். கார்த்­திகை ரோகிணி மிரு­க­சீ­ரிடம், திரு­வா­திரை, புனர்­பூசம், ஆயில்யம், ஸ்தான மாற்­றமும் உத்­திரம், அஸ்தம், சித்­திரை, சுவாதி, விசாகம், அனுஷம், ஸ்தான­லா­பமும் கேட்டை, மூலம், பூராடம், கோபமும், உத்­தி­ராடம், திரு­வோணம், அவிட்டம், சதயம், பூரட்­டாதி, உத்­தி­ரட்­டாதி இராஜ வெகு­மா­ன மும் மகர சங்­கி­ராந்தி பலன்­க­ளாகும்.

சூரி­யனின் பெரு­மையைக் கொண்ட இத்தைத் திரு­நாளில் சகல ஜீவராசிகளும் இன்புற்று வாழ இறைவனைப் பிரார்த் திக்கிறேன்.

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right