"இந்த உலகில் நாம் கற்றுக்கொண்ட பாடத்தை விட  வறுமை, அவமானம், புரக்கணிப்பு இவைகள் கற்றுத்தந்த பாடமே அதிகம். - தீயவன்": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (11.01.2019 )

2019-01-11 10:37:02

11.01.2019  விளம்பி வருடம் மார்­கழி மாதம் 27ஆம் நாள்  வெள்­ளிக்­கி­ழமை. 

சுக்­கில பட்ச பஞ்­சமி திதி மாலை 5.26 வரை. அதன் மேல் சஷ்டி திதி. பூரட்­டாதி நட்­சத்­திரம் நாள் முழு­வதும். சிரார்த்த திதி. வளர்­பிறை. பஞ்­சமி சித்­த­யோகம். கீழ் நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டமம் நட்­சத்­திரம் பூரம். சுப­நே­ரங்கள் காலை 9.30–10.30 மாலை 4.30–5.30. ராகு­காலம் 10.30–12.00. எம­கண்டம் 3.00–4.30. குளி­கை­காலம் 7.30–9.00. வார­சூலம் மேற்கு (பரி­காரம்– வெல்லம்). விஷ்ணு ஆல­யங்­களில் கூடார வல்லி உற்­சவம். 

மேடம் : அமைதி, சாந்தம்

இடபம் : உதவி, நட்பு 

மிதுனம் :நிறைவு, பூர்த்தி

கடகம் :  அன்பு, ஆத­ரவு

சிம்மம் : தொல்லை, சங்­கடம்  

கன்னி : புகழ், தேர்ச்சி

துலாம் : அமைதி, நிம்­மதி 

விருச்­சிகம் : உற்­சாகம், வர­வேற்பு

தனுசு : சுகம், ஆரோக்­கியம்

மகரம் :  புகழ், செல்­வாக்கு

கும்பம் : கவனம், எச்­ச­ரிக்கை

மீனம் :  உயர்வு, மேன்மை

இன்று அதி­காலை விஷ்­ணு­வா­லயம் சென்று ஸ்ரீ ஆண்டாள் அரு­ளிய திருப்­பா­வையில் “கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா” என்று தொடங்கும் பாடலைப் பாட திரு­மண பாக்­கியம், தொழிலில் வெற்றி ஏற்­படும்.” மூட நெய் பெய்து முழங்கை வழி­வார கூடி இருந்து குளிர்ந்­தேலோ ரெம்­பாவாய்” திருப்­பாவை தொடரும்.

(“தடு­மாறி விழு­வதில் தவ­றில்லை. எழுந்­தி­ருக்க எண்­ண­மில்­லாமல் இருப்­ப­துதான் தவறு”) சந்­திரன், சுக்­கிரன் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று,

அதிர்ஷ்ட எண்கள்:      7–6  

பொருந்தா எண்கள்:     9– 8–3

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: பச்சை கலந்த நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right