25.03.2016 மன்­மத வருடம் பங்­குனி மாதம் 12ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை.

Published on 2016-03-25 09:13:06

கிருஷ்ண பட்ச துவி­தியை திதி முன்­னி­ரவு 9.54 வரை. அதன் மேல் திரி­தியை திதி. சித்­திரை நட்­சத்­திரம் பின்­னி­ரவு 12.25 வரை. பின்னர் சுவாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை துவி­தியை சித்­த­யோகம் சுப­மு­கூர்த்த நாள் சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் பூரட்­டாதி, உத்­தி­ரட்­டாதி. சுப­நே­ரங்கள் காலை 9.30 – 10.30. மாலை 4.30 – 5.30 ராகு காலம் 10.30 – 12.00 எம­கண்டம் 3.00 – 4.30. குளிகை காலம் 7.30 – 9.00 வார­சூலம் – மேற்கு (பரி­காரம் – வெல்லம்).

மேடம் :வெற்றி, யோகம்

இடபம் :அமைதி, நிம்­மதி

மிதுனம் :புகழ், பெருமை

கடகம் :யோகம், அதிர்ஷ்டம்

சிம்மம் :புகழ், பெருமை

கன்னி :பொறுமை, நிம்­மதி

துலாம் :நஷ்டம், கவலை

விருச்­சிகம் :தேர்ச்சி, புகழ்

தனுசு :தடை, தாமதம்

மகரம் :லாபம், லஷ்­மீ­கரம்

கும்பம் :உயர்வு, மேன்மை

மீனம் :தனம், சம்­பத்து

திருப்­பா­ணாழ்வார் அரு­ளிய “அம­ல­னாதி பிரான்” பாசுரம் 09 ஆல­ம­ரத்தின் இலைமேல் ஒரு பால­கனாய் ஞால­மேழும் உண்டான் அரங்­கத்து அர­வி­ன­னையான். கோல­மா­ம­ணி­யா­ரமும் முத்துத் தாமமும் முடி­வில்­லாதோ ரெழில் நீல­மேனி, ஐயோ! நிறை கொண்­டது என் நெஞ்­சி­னையே! பொரு­ளுரை – பிர­ளய காலத்தில் ஏழு­ல­கங்­க­ளையும் உண்டு பெரிய ஆல­ம­ரத்தின் இலை­யிலே ஒரு குழந்­தை­யாக வீற்­றி­ருந்தான். திரு­வ­ரங்­கத்தில் ஆதி­சேடன் மேல் சய­னித்­தி­ருப்­பவன் அழ­கிய சிறந்த நவ­ரத்­தின மாலையும், முத்­தா­ரமும் மார்பில் அணிந்து எல்­லை­யற்ற அழ­கு­டைய நீல­மே­னியின் அழகு ஐயோ! என் மனதைக் கொள்ளை கொண்டு விட்­டதே. (ஆழ்வார் திரு­வ­டி­களே சரணம்) நாளை “துவா­ரகா” கண்­ணனைக் கண்ட என்­கண்கள்.

கேது, சூரியன் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1 – 2 – 5

பொருந்தா எண்கள்: 7 – 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர்பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)