"நட்பு என்பது என்றும் அழியாச் சொத்து குடும்பம் என்பது பெரிய சொத்து ஆசிரியர் என்பது கிடைத்த சொத்து இச் சொத்துக்களை இழந்து விடக் கூடாது...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (03.01.2019)

2019-01-03 10:46:05

03.01.2019 விளம்பி வருடம் மார்­கழி மாதம் 19ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை. 

கிருஷ்ண பட்ச திர­யோ­தசி திதி. பின்­னி­ரவு  5.04 வரை.  அதன் மேல் சதுர்த்­தசி திதி. அனுசம் நட்­சத்­திரம்  பகல் 1.25 வரை. பின்னர் கேட்டை நட்­சத்­திரம்.  சிரார்த்த திதி. தேய்­பிறை திர­யோ­தசி. சித்­த­ யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் பரணி, கார்த்­திகை. சுப­நே­ரங்கள் பகல் 10.30 – 11.30,  ராகு­ காலம்  1.30 – 3.00, எம­கண்டம் 6.00 – 7.30, குளி­கை­காலம் 9.00 – 10.30. வார­சூலம் – தெற்கு. (பரி­காரம் –தைலம்).  

மேடம் : உயர்வு, மேன்மை 

இடபம் : சுகம், ஆரோக்­கியம் 

மிதுனம் : லாபம், லக்ஷ்­மீ­கரம்

கடகம் :  அன்பு, இரக்கம்

சிம்மம் : இன்சொல், உற்­சாகம்  

கன்னி : வரவு, லாபம்

துலாம் : தடை, இடை­யூறு 

விருச்­சிகம் : பகை, விரோதம்

தனுசு : ஆசை, நட்டம் 

மகரம் :  சுபம், மங்­களம்

கும்பம் : வாழ்வு, வளம்

மீனம் :  சாதனை, புகழ் 

மார்­கழி திருப்­பள்­ளி­யெ­ழுச்சி, ஆண்டாள் அரு­ளிய திருப்­பாவை அதி­காலை ஓதுதல். நாளை தொண்­ட­ர­டி­பொ­டி­யாழ்வார் திரு­நட்­சத்­திரம். அவ­த­ரித்த ஊர் திரு­மண்டஸ் குடி, மாதம் மார்­கழி, நட்­சத்­திரம் கேட்டை, அம்சம் வந­மா­லாம்சம். அரு­ளிய பிர­பந்­தங்கள் திரு­மாலை, திருப்­பள்­ளி­யெ­ழுச்சி. திரு­மாலை அறி­யாதோர் திரு­மாலை அறியார். “இச்­சுவை தவிர யான்போய் இந்­தி­ர­லோகம் ஆளும் அச்­சுவை பெறினும் வேண்டேன் அரங்­கமா நக­­ரு­ளானே.

குரு, சுக்கிரன் கிர­கங்­களின் ஆதிக்கம் கொண்ட இன்று, அதிர்ஷ்ட எண் :      9  

பொருந்தா எண்கள் :     3–6– 8

அதிர்ஷ்ட வர்ணங்கள் :   பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right