24.03.2016 மன்­மத வருடம் பங்குனி மாதம் 11ஆம் நாள் வியாழக்கிழமை

Published on 2016-03-24 08:58:08

கிருஷ்­ண­பட்ச பிர­தமை திதி முன்­னி­ரவு 7.51 வரை. அதன் மேல் துவி­தியை திதி. அஸ்தம் நட்­சத்­திரம். முன்­னி­ரவு 9.51 வரை. பின்னர் சித்­திரை நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை பிர­தமை. சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் சதயம் பூரட்­டாதி. சுப­நே­ரங்கள் பகல் 10.30 – 11.30, பிற்­பகல் 12.30 – 1.30. ராகு காலம் 1.30 –3.00. எம­கண்டம் 06.00 – 7.30. குளிகை காலம் 9.00 – 10.30. வார சூலம் –தெற்கு (பரி­காரம் – தைலம்).

மேடம் : அமைதி, சாந்தம்

இடபம் : உதவி, நட்பு

மிதுனம் : ஆக்கம், நிறைவு

கடகம் : அன்பு, ஆத­ரவு

சிம்மம் : தொல்லை, சங்­கடம்

கன்னி : புகழ், தேர்ச்சி

துலாம் : அமைதி, நிம்­மதி

விருச்­சிகம் : உற்­சாகம், வர­வேற்பு

தனுசு : சுகம், ஆரோக்­கியம்

மகரம் : புகழ், பாராட்டு

கும்பம் : கவனம், எச்­ச­ரிக்கை

மீனம் : உயர்வு, மேன்மை

திருப்­பா­ணாழ்வார் அருளிச் செய்த “அம­ல­னாதி பிரான் பாசுரம் 08” பரி­ய­னாகி வந்த அவ­ணுடல் கீண்ட அம­ரர்க்கு அரிய ஆதிப்­பிரான். அரங்­கத்­த­மலன் முகத்­துக்­க­ரி­ய­வாகிப் புடை­ப­ரந்து மிளிர்ந்து செவ்­வ­ரி­யோடி நீண்ட அப்­பெ­ரிய வாய கண்கள் என் னைப் பேதமை செய்­த­னவே! பொரு­ளுரை பெருத்த உருவம் கொண்ட இரண்­ய­க­சி­ழ வின் உட­லைக்­கி­ழித்த தேவர்­க­ளாலும் அணு­க­மு­டி­யாத பரி­சுத்­த­னான ஆதி­மூ­லமே திரு­வ­ரங்­கத்துள் வந்து தூய்­மை­யனாய் திருக்கண் மலர்ந்­துள்ளார். அவ­ரது திரு­முக மண்­ட­லத்தில் கறுத்த நிற­மு­டை­யதாய் விசால மனதாய் ஒளி வீசித் திகழ்ந்து சிவந்த மெல்­லிய வரி­க­ளோடு காத­ளவு நீண்ட திரு­வி­ழிகள் என்னைப் பித்துப் பிடித்­த­வனாய் செய்­கின்­றதே (ஆழ்வார் திரு­வ­டி­களே சர ணம்) நாளை துவா­ரகா “கண்ணின் நீல மேனியின் அழகு” சுக்­கிரன், செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

பொருந்தா எண்கள் 3, 2, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், சிவப்பு