23.03.2016 மன்மத வருடம் பங்குனி மாதம் 10 ஆம் நாள் புதன்கிழமை

Published on 2016-03-23 07:36:32

பௌர்ணமி திதி மாலை 5.55 வரை. அதன் மேல் பிரதமை திதி. உத்தரம் நட்சத்திரம் இரவு 7.23 வரை. பின்னர் அஸ்தம் நட்சத்திரம். சிரார்த்த திதி பௌர்ணமி, அமிர்தயோகம், மேல்நோக்கு நாள், சந்திராஷ்டம நட்சத்திரங்கள் அவிட்டம், சதயம் சுபநேரங்கள் காலை 9.30– 10.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 12.00– 1.30, எமகண்டம் 7.30– 9.00, குளிகைகாலம் 10.30– 12.00, வார சூலம் வடக்கு (பரிகாரம்– பால்) பௌர்ணமி விரதம், பங்குனி உத்தரம் முருகப் பெருமானை வழிபடல் நன்று

மேடம்: லாபம், லஷ்மீகரம்

இடபம்: நன்மை, அதிர்ஷ்டம்

மிதுனம்: போட்டி, ஜெயம்

கடகம்: ஆர்வம், திறமை

சிம்மம்: முயற்சி, முன்னேற்றம்

கன்னி: பொறுமை, நிதானம்

துலாம்: உயர்வு, மேன்மை

விருச்சிகம்: நட்பு, உதவி

தனுசு: வெற்றி, விவேகம்

மகரம்: ஜெயம், புகழ்

கும்பம்: கவலை, கஷ்டம்

மீனம்: தடை, இடையூறு

திருப்பாணாழ்வார் அருளிய “அமலனாதி பிரான்” பாசுரம் 7. கையினார் சுரிசங்கன ஆழியர் நீள் வரை போல் மெய்யனார் துளபவிரையார் கமழ்நீள்முடி எம் ஐயனார் அணி அரங்கனார் அரவினனை மிசை மேய மாயனார் செய்ய வாய், ஐயோ! என் சிந்தை கவர்ந்ததுவே! பொருளுரை; ஸ்ரீ ரங்கநாதன் தனது திருக்கரங்களில் சுழியை உடைய சங்கையும் தீ வீசுகின்ற சுதர்??????தையும் தரித்திருக்கிறார். அவர் திருமேனி  மலை போன்றது. வாசனை வீசும் துளசி மாலையைத்  தன் திருமுடியில் அணிந்துள்ளார் என் சுவாமியழகு திருவரங்கத்துள் திருவனந்தன் மேல் சயனித்து உள்ளார். அந்த மாயவனின் சிவந்த வாயழகு ஐயோ! என் சிந்தையை கவர்ந்து கொண்டதே! (ஆழ்வார் திருவடிகளே சரணம்) நாளை திருவிழிகள் அழகு.

புதன், சனி கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்: 5

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: சாம்பல், நீலம், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)