கோலாகலமாக தொடங்கியது ரியோ ஒலிம்பிக்

Published on 2016-08-06 09:03:29

31 ஆவது ஒலிம்பிக் போட்டி பிரேஸில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று காலை 4.30 மணியளவில் தொடங்கியது.

தென்அமெரிக்காவில் அரங்கேறும் முதல் ஒலிம்பிக்கான இதில் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு உணர்வு பூர்வமான கலை நிகழ்ச்சிகள், அதிரடி நடனங்கள், சாகசங்கள் மற்றும் லேஷர் ஷோ, வண்ணமயமான வாணவேடிக்கை உள்ளிட்டவை நடைப்பெற்றன.