ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா -2019

2019-12-04 13:48:54

(நெவில் அன்தனி)
ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதுவிழாவில் இலங்கையின் அதிசிந்த சர்வதேச கிரிக்கெட் வீராங்கனை விருது உட்பட நான்கு விருதுகளை இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி சாமரி அத்தப்பத்து சுவீகரித்தார்.
அத்துடன் இலங்கை ஆடவர் இருபது 20 அணித் தலைவர் லசித் மாலிங்க, முன்னாள் அணித் தலைவர் திசர பெரேரா ஆகியோர் தலா 2 விருதுகளை வென்றெடுத்தனர்.
ஆடவருக்கான அதிசிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருது இம்முறை வழங்கப்படவில்லை. விருதுகளுக்கான சர்வதேச கிரிக்கெட் பருவகாலத்தில் வீரர்கள் எவரும் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்த தவறியதால் இந்த விருது வழங்கப்படவில்லை.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதுவிழா பத்தரமுல்லை வோட்டர்ஸ் எஜ் மண்டபத்தில் நேற்று இரவு நடைபெற்றது.
இவ் விருதுவிழாவில் உள்ளூர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்டம், பந்துவீச்சு, சகலதுறை ஆட்டம் ஆகியவற்றில் பிரகாசித்த வீர, வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அத்துடன் இருபாலாரிலும் கழக மட்டப் போட்டிகளில் சம்பியன் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்ற அணிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.
இலங்கையின் அதி சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீராங்கனை விருதை வென்ற சாமரி அத்தப்பத்து, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதி சிறந்ந துடப்பாட்டக்காரர், அதி சிறந்த சகலதுறை ஆட்டக்காரர், சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் அதி சிறந்த துடுப்பாட்டக்காரர் ஆகிய விருதுகளையும் தனதாக்கிக்கொண்டார்.
சாமரி அத்தப்பத்து வெளிநாட்டில் இருப்பதால் அவர் சார்பில் பிரசாதனி விருதுகளைப் பெற்றுக்கொண்டார்.
இவ் விருது விழாவில் ஷஷிகலா சிறிவர்தனவுக்கும் இரண்டு விருதுகள் கிடைத்தன. இவர் சரவ்தேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் அதி சிறந்த பந்துவீச்சாளர், அதிசிறந்த சகலதுறை ஆட்டக்காரர் விருதுகளை வென்றெடுத்தார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிசிறந்த பந்துவீச்சாளர் விருது ஓஷாதி ரணசிங்கவுக்கு கிடைத்தது.
ஆடவர் பிரிவில் சரவ்தேச ஒருநாள் மற்றும் சர்வதேச இருபது 20 ஆகிய இரண்டு வகை கிரிக்கெட் போட்டிகளிலும் அதிசிறந்த பந்துவீச்சாளருக்கான விருதுகளை யோக்கர் மன்னன் லசித் மாலிங்க தனதாக்கிக்கொண்டார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதி சிறந்த சகலதுறை ஆட்டக்காரர், சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் அதி சிறந்த துடுப்பாட்டக்காரர் ஆகிய விருதுளை திசர பெரேரா வென்றெடுத்தார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அணித் தலைவர் திமுத் கருணாரட்ன அதிசிறந்த துடுப்பாட்டக்காரர் விருதையும், டில்ருவன் பெரேரா அதிசிறந்த பந்துவீச்சாளர் விருதையும் தனஞ்சய டி சில்வா அதிசிறந்த சகலதுறை ஆட்டக்காரர் விருதையும் வென்றனர்.
சர்வதேச ஒருநாள் கரிக்கெட் போட்டிகளில் குசல் ஜனித் பெரேரா அதிசிறந்த துடுப்பாட்டக்காரர் விருதை வென்றெடுத்தார்.
(படப்பிடிப்பு: ஜே. சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right