என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி

Published on 2018-08-30 14:15:39

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி 12 வலயங்களை கொண்டதாகவும் 25 ஆயிரம் குடும்பங்களின் உட்கட்டமைப்பு வசதிகளையும் உள்ளடக்கியதாக அபிவிருத்தி செய்யப்படவிருக்கின்றன.

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியை மொனராகலை மாவட்ட செயலக வளாகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

இதனைத்.தொடர்ந்து கண்காட்சியின் சகல காட்சிக் கூடங்களுக்கும் விஜயம் செய்த பிரதமர் பொதுமக்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.

கண்காட்சி 12 வலயங்களை கொண்டதாக அமைந்துள்ளது. 25 ஆயிரம் குடும்பங்களின் உட்கட்டமைப்பு வசதிகளும் இதற்கமைவாக அபிவிருத்தி செய்யப்படவிருக்கின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளில் அரசாங்கம் நிறைவேற்றிய பணிகள் பற்றியும் 2025 ஆம் ஆண்டு வரையிலான அரசாங்கத்தின் இலக்குகளுடன் கூடிய பணிகள் தொடர்பாகவும் கண்காட்சியில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டுவதும் இதன் பிரதான நோக்கமாகும். கண்காட்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இடம்பெறவிருக்கிறது.