செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்

Published on 2018-08-14 15:56:36

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2006 ஆண்டு ஆவணி மாதம் 14 ஆம் திகதி விமானங்கள் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் 54 பேர் மற்றும் பணியாளர்கள் 4 பேரினதும் 12 ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று உணர்வுபூர்வமாக மக்களது கண்ணீருடன் நடைபெற்றது.

படுகொலை இடம்பெற்ற வள்ளிபுனம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களது திருவுருவப்படங்கள் வைக்கப்பட்ட விசேடமாக அமைக்கப்பட்ட நினைவிடத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதேவேளை, செஞ்சோலை படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவு தினம் யாழ்.பல்கலைகழகத்தில் யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிலையில், செஞ்சோலை படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு மட்டக்களப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்றது.