நல்லூர் கந்தனின் வருடாந்த இரதோற்சவப் பெருவிழா

Published on 2017-08-20 11:17:23

ஈழத்தில் புகழ்பெற்ற ஆலயமான யாழ். அழகு பெரும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
24ஆம் நாளான இன்றைய தினம் தேர்த்திருவிழாவைக் காண உள்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பெருந்திரளான பக்தர்கள் அலையென திரண்டு வருகை தந்திருந்தனர்.
மேலும், நாளைய தினம் 25ஆம் நாள் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.