13ஆவது ஸ்ரீ தியாகராஜ ஆராதனை விழா

Published on 2017-02-21 12:03:56

கொழும்பு இந்திய கலாசார மையத்தின் ஏற்பாட்டில் 13ஆவது ஸ்ரீ தியாகராஜ ஆராதனை விழா கடந்த 17 ஆம் திகதி கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்து கல்வி சமூகம் மற்றும் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டட் நிறுவனம் இணைந்து நடத்திய இந்நிகழ்வு இலங்கைக்கான இந்திய துணை உயர் ஸ்தானிகர் அரிந்தம் பாச்சி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் கலந்துகொண்டார்.

யாழ். பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம், ஹட்டன் ஹைலேண்டஸ் கல்லூரி, கட்புல மற்றும் அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மாணவர்களும் இந்திய கலாசார மையத்தின் மாணவர்களும் மற்றும் ஏனைய இசை பிரியர்களும் இந்நிகழ்வில் கலந்து பல இசை நிகழ்ச்சிகளை அரங்கேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.