உழைக்கும் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்
வர்ணமயமான கொடிகள், ஒவ்வொரு கட்சிசார் பதாகைகள், சாராயத்திற்கும், 500 ரூபாய் பணத்துக்குமான மக்கள் கூட்டம், பச்சை, நீலம், மஞ்சள், சிவப்பு என்ற வர்ணத்திலான பேரணிகள், ஒவ்வொரு அரசியல் கட்சியின் வெற்றிக் கோஷங்களை எழுப்பிய வண்ணம் வீதிகளில் ஆரவார ஊர்வலம். என்ன தேர்தல் காலம் வந்துவிட்டதா என எண்ணவேண்டாம்.