|
|
|
By
M.Nesamani 2012-09-15 13:07:29 |
|
சப்ரகமுவ மாகாணத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவங்களைப் பெற்றுகொள்வதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏனைய கட்சிகளுடன் கூட்டிணைந்து மேற்கொண்ட நடவடிக்கையானது வரவேற்கத்தக்கது. இது மலையக சமுதாயத்துக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும் என தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் பணிப்பாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இந்த சாணக்கியம் மிக்க அரசியல் பயணமானது தொடர வேண்டும் எனவும் அதற்கான ஒத்துழைப்புகளை தாம் எப்போதும் வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை பணிப்பாளர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நடந்து முடிந்துள்ள மாகாண சபைத் தேர்தலில் சப்ரகமுவ மாகாணத்தில் மலையக கூட்டணிக்கு கிடைக்கப்பெற்றுள்ள வெற்றியானது மறக்க முடியாத ஒரு சரித்திரமாகும்.
காலம் காலமாக ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் மலையக மக்களை சுரண்டி அவர்களின் வாழ்வாதாரத்தை மழுங்கடித்தனர் என்பதை எவராலும் மறுப்பதற்கில்லை.
ஆனால் அவ்வாறான சந்தர்ப்பங்களில் படிப்படியாக மலையக மக்களின் உரிமைகளையும் தேவைகளையும் வென்றெடுத்த ஓர் அமைப்பு என்றால் அது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்தான் என்பதும் யாவரும் அறிந்த ஒன்றே.
இதுவரை காலமும் எம்மை ஏமாற்றி வந்த அரசியல் பெருந்தலைவர்களின் கபட வார்த்தைகளாலும் கைங்கரிய நோக்கங்களினாலும் எமது மக்கள் தோற்றுப்போனது ஒருபுறமிருக்க கோடரிக்காம்பாக இருந்த எமது சமூகத்தின் வளர்ச்சியை மழுங்கடித்த கரும்புள்ளிகளுக்கு இந்த வெற்றியானது பாடம் புகட்டியுள்ளது.
இந்த வெற்றிக்காக இலங்கை தொழிலாளர் காங்கிஸ் உடன் இணைந்து பங்காற்றிய மலையக மக்கள் முன்னணியின் தலைவி சாந்தினி சந்திரசேகரனுக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் மற்றும் அவர்களோடு இணைந்து ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு தொடர்ந்தும் இந்த ஒற்றுமை மேலோங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றார்.
|
|
||||
| Interesting | |||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||
|
|
Feature |
|||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||

Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------