|
|
|
By
Sridaran 2012-09-03 17:05:07 |
|
கொட்டகலை கிறிஸ்டல்பார்ம் தோட்ட தேயிலைத் தொழிற்சாiலையைத் திறக்கக் கோரி இந்தத் தோட்டத்தைச்சேர்ந்த தொழிலாளர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஒரு மாதகாலமாக திறக்கப்படாதுள்ள கிறிஸ்டல் பார்ம் தோட்ட தொழிற்சாலையைத் திறக்குமாறு இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தோட்ட முகாமையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் தேயிலை விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியின் காரணமாக தற்போதைக்குத் தேயிலைத் தொழிற்சாலையைத் திறக்க முடியாதென தோட்ட முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கெதிர்ப்புத் தெரிவித்தே இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த 300 ஆண், பெண் தொழிலாளர்கள் திடீர்பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப்பணி பகிஷ்கரிப்புப் போராட்டம் தொடர்பாக தோட்டத் தொழிலாளர்கள் தாம் அங்கத்துவம் வகிக்கின்ற தொழிற்சங்கங்களின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர்.
|
|
||||
| Interesting | |||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||
|
|
Feature |
|||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||

Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------