Reporting Sri Lanka News in Tamil
 

ஹொலிப்பண்ட் தோட்ட பாதை புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்

Share
By R.Praba
2012-08-09 14:04:06

நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட நுவரெலியா சாந்திபுரத்தில் இருந்து ஹொலிப்பண்ட் தோட்டத்துக்கான பாதையின் புனரமைப்பு வேலைகள் நேற்று புதன் கிழமை ஆரம்பிக்கப்பட்டன.

நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமுமான ஜெ.ஸ்ரீரங்காவின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைப்பு செய்யப்படும் ஹொலிப்பண்ட் தோட்டத்திற்கான பாதையின் புனரமைப்பு வேலைகள் நேற்றுக் காலை ஆரம்பிக்கப்பட்டன.

இவ் ஆரம்ப வைபவத்துக்கு நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமுமான ஜெ.ஸ்ரீரங்கா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

அவர் இங்கு உரையாற்றும் போது மலையகத்தின் பெரும்பாலான பாதைகள் இரண்டு பக்கமும் கொங்ரீட் போடப்பட்டு நடுவில் மண்நிரப்பி விடப்பட்டுள்ளன. இந்தப் பாதை அமைப்பு நம் போன்ற நான்கு சக்கரத்தில் வரும் அரசியல்வாதிகளுக்கு போடப்பட்டதேயன்றி தோட்ட மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் முச்சக்கர வண்டிகளுக்கு போடப்பட்டவையல்ல. இந்நிலையில் இந்த வீதிகளில் கர்ப்பிணிப் பெண்களை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்றால் இடையிலேயே பிரசவம் நடந்து விடும். எனவே தான் நான் மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற அமைப்பிலான கார்ப்பட் பாதைகள் போடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Share
Interesting
  யானையும் மசாஜ் செய்யும் 2013-05-20 11:23:09
  இயற்கையின் அதிசயம் 2013-05-02 14:22:57
  வாருங்கள்..! கேக் சாப்பிடலாம் 2013-04-11 10:50:46
  கவர்ச்சி நாய்கள் 2013-04-08 11:41:23

 

Cinema
  அஜீத் படத்தில் பாடும் ‘கானா’ பாலா 2013-05-22 11:09:06
  ஒரே நாளில் ரிலீஸ்: விஜய், சூர்யா படங்கள் போட்டி 2013-05-21 11:27:10
  ரெய்னா- ஸ்ருதி நெருக்கம்? 2013-05-18 10:41:55
  ‘என்னவளே அடி என்னவளே’ பாட்டு பாடி சமந்தாவை கவர்ந்த நடிகர் சித்தார்த் 2013-05-15 11:25:03
Feature
  காற்றில் கலந்த செங்கொடி ஓ.ஏ.ராமையா நினைவலைகள்! 2013-05-20 13:53:27
  ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய ‘அம்மா’ எனும் உன்னத வார்த்தை 2013-05-12 09:25:36
  பெற்றோரைப் பலியெடுத்த ஓரினச் சேர்க்கை 2013-05-03 11:07:05
  திருமலை அலஸ்தோட்ட மசாஜ் சென்ரர்களில் நடப்பது என்ன? 2013-04-29 11:07:00
SITES
Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
CONTACT
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------
© 2013 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved | Powered by Virakesari Online