|
|
|
By
General 2012-08-06 10:43:19 |
|
அமைச்சுப்பதவிகள் இல்லாத போதும் அரசாங்கத்தின் நிதியைக் கொண்டு தோட்டப்பகுதிகளில் அபிவிருத்திப் பணிகளை நேர்மையாக முன்னெடுத்து வருவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.
கொட்டகலை யுனிபீல்ட் தோட்டத்தில் புனரமைக்கப்பட்ட பாதை ஒன்றை நேற்று 5 ஆம் திகதி திறந்து வைத்துப்பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் கொட்டகலை அமைப்பாளர் சிவகுமார் சுரேஷ் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் மத்திய மாகாணசபை உறுப்பினர் சிங்பொன்னையா, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப், தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், அமைப்பாளர்கள், இணைப்பாளர்கள், தோட்ட மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தோட்டப்பகுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகளில் பாதை அபிவிருத்தி என்பது முக்கியமான விடயமாகும். அந்த அடிப்படையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் விசேட நிதியொதுக்கீட்டின் ஊடாகவும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டின் ஊடாகவும் மிகவும் மோசமான நிலையிலுள்ள தோட்டப்பகுதி பாதைகளை எனது வேண்டுகோளுக்கிணங்க அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் தெரிவித்தார்.
|
|
||||
| Cinema | |||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||
Feature |
|||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||

Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------