|
|
|
By
2012-08-06 10:21:46 |
|
பொகவந்தலாவை சென்விஜன்ஸ் சமுத்திரவள்ளித் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 162 பேர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இம் மாதம் 9 ஆம் திகதி முதல் தொடர் பணி நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்விஜன்ஸ் தோட்டத்தில் தொழிலாளர்களுக்குத் தொடர்ச்சியாக வேலை வழங்கும் வகையில் தோட்ட நிருவாகம் செயற்படாமை , தோட்டங்கள் உரிய வகையில் பராமரிக்கப்படாமை , புதியவர்களுக்குத் தொழில் வாய்ப்பு வழங்கப்படாமை , லயன் கூரைகள் திருத்தப்படாமை , தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பல்வேறு கொடுப்பனவுகள் உரிய காலத்தில் வழங்கப்படாமை என்பனவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மேலும் பல கோரிக்கைகளை முன் வைத்துமே தொழிலாளர்கள் இந்தப்பணி நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப்போராட்டம் தொடர்பாக தொழிலாளர்கள் அங்கத்துவம் வகிக்கின்ற தொழிலாளர் தேசிய சங்கம் , இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் , மலையக மக்கள் முன்னணி ,இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் என்பனவற்றின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அட்டன் தொழில் ஆணையாளர் பணிமனையின் ஊடாக தொழிலாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண தோட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ___
|
|
||||
| Interesting | |||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||
|
|
Feature |
|||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||

Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------