|
|
|
By
Kavinthan Shanmugarajah 2012-09-18 12:37:30 |
|
இணையத்தினூடாக வர்த்தகம் மேற்கொள்ளும் தளங்களில் மிகப்பிரபலமானது 'ஈபே' ஆகும்.
அது தனது வியாபாரக் குறியீட்டினை (Logo) தற்போது மாற்றியுள்ளது.
புதிய தோற்றத்துடன் கூடிய இவ் வியாபாரக் குறியீடானது சுமார் 17 வருடங்களின் பின்னர் மாற்றப்பட்டுள்ளது.

இம் மாற்றமானது தமது புகழ்மிக்க வரலாற்றினையும் வளமான எதிர்காலத்தையும் எடுத்துக்காட்டுவதாக ஈபே தெரிவித்துள்ளது.
இணைய வர்த்தக உலகில் 1995 ஆம் ஆண்டு காலடி எடுத்துவைத்த ஈபே பலகோடிகள் புரளும் தளங்களில் ஒன்றாக தற்போது திகழ்கின்றது.
ஈபே சுமார் 28,000 ஊழியர்களைக் கொண்டுள்ளதுடன் கடந்த வருடத்தின் இதன் நிகர வருமானம் 3.229 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
உலகின் மிகப்பெரிய இணையம் ஊடாக வர்த்தகம் மேற்கொள்ளும் இத்தளத்தின் மொத்த சொத்து 27 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமென்பது குறிப்பிடத்தக்கது.
|
|
||||
| Cinema | |||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||
Feature |
|||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||

Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------