Reporting Sri Lanka News in Tamil
 

சேர்கோபிதகஸ் லொமாமியன்சிஸ்': புதிய வகைக் குரங்கு கொங்கோவில் கண்டுபிடிப்பு

Share
By Kavinthan Shanmugarajah
2012-09-14 11:58:45

 
 
 
 
கொங்கோ நாட்டில் புதியவகைக் குரங்கினமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
அந்நாட்டில் 'லெசூலா' என அழைக்கப்படும் இக்குரங்கினத்தின் விஞ்ஞான ரீதியான பெயர் 'சேர்கோபிதகஸ் லொமாமியன்சிஸ்'  (cercopithecus lomamiensis) என்பதாகும்.
 
 
இவ் இனத்தைச் சேர்ந்த குரங்கொன்று கடந்த 2007 ஆம் ஆண்டு ஆய்வாளர்களின் கண்ணில் பட்டுள்ளது.
 
இதனைத்தொடர்ந்து கொங்கோவின் காட்டுப்பகுதிகளில் கடந்த 5 வருடங்களாகத் தேடி, மரபணுவியல் மற்றும் உயிரியல் ஆராய்ச்சிகளை நடத்தி இக்குரங்கினமானது , விஞ்ஞான உலகுக்கு புதியது என்பதனை உறுதிசெய்துள்ளனர்.
 
 கொங்கோவின் மையப்பகுதியில் உள்ள மழைக்காடுகளில் இக்குரங்கினமானது அதிகமாக வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
 
 
இக்குரங்குகள் இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதாகவும் இதனால் இவ்வினம் வேகமாக அழியக்கூடிய சாத்தியங்கள் நிலவுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
'லெசூலா' குரங்குகளானவை 'சேர்கோபிதகஸ் ஹம்லைனி' (Cercopithecus hamlyni) என்றழைக்கப்படும் ஆந்தை முகக் குரங்குகளின் முகத்தோற்றத்தினை ஒத்ததாகக் காணப்படுகின்ற போதிலும் இவை அவற்றிலிருந்து வேறுபட்டதென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
 
 
ஆபிரிக்காவில் கடந்த 28 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட 2 ஆவது புதிய குரங்கினம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Share
Interesting
  யானையும் மசாஜ் செய்யும் 2013-05-20 11:23:09
  இயற்கையின் அதிசயம் 2013-05-02 14:22:57
  வாருங்கள்..! கேக் சாப்பிடலாம் 2013-04-11 10:50:46
  கவர்ச்சி நாய்கள் 2013-04-08 11:41:23

 

Cinema
  அஜீத் படத்தில் பாடும் ‘கானா’ பாலா 2013-05-22 11:09:06
  ஒரே நாளில் ரிலீஸ்: விஜய், சூர்யா படங்கள் போட்டி 2013-05-21 11:27:10
  ரெய்னா- ஸ்ருதி நெருக்கம்? 2013-05-18 10:41:55
  ‘என்னவளே அடி என்னவளே’ பாட்டு பாடி சமந்தாவை கவர்ந்த நடிகர் சித்தார்த் 2013-05-15 11:25:03
Feature
  காற்றில் கலந்த செங்கொடி ஓ.ஏ.ராமையா நினைவலைகள்! 2013-05-20 13:53:27
  ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய ‘அம்மா’ எனும் உன்னத வார்த்தை 2013-05-12 09:25:36
  பெற்றோரைப் பலியெடுத்த ஓரினச் சேர்க்கை 2013-05-03 11:07:05
  திருமலை அலஸ்தோட்ட மசாஜ் சென்ரர்களில் நடப்பது என்ன? 2013-04-29 11:07:00
SITES
Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
CONTACT
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------
© 2013 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved | Powered by Virakesari Online